வெயில் காலத்தில் ஃபிரிட்ஜ் தண்ணீர், அதிர்ச்சி தரும் பக்கவிளைவுகள்
உடல் வெப்பநிலையை சீராக்க வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் ஜில்லென தண்ணீர் குடித்து அதன் வெப்பநிலையைக் குறைத்தால் மீண்டும் சமநிலைப்படுத்த தன் ஒட்டுமொத்த ஆற்றலையும் வெளிப்படுத்தும். இதனால் மற்ற செயல்கள் குறிப்பாக செரிமான வேலைகள் தடைபடும். குளிர்ச்சியாக தண்ணீர் குடிப்பதால் செரிமானம் சீராக இல்லை என்றாலே மலச்சிக்கல் தானாக உண்டாகும்.
குளுர்ச்சியாக ஃபிரிட்ஜில் இருந்து தண்ணீரை அப்படியே குடிப்பதால் தொண்டை வலி, கரகரப்பு, வீக்கம் உண்டாகும். மூக்கடைப்பு ஏற்படும்.
உணவு உண்ட பின் குளுர்ச்சியான நீரைக்குடிப்பதால் உணவில் உள்ள கொழுப்புகளை உடல் பிரிப்பதற்கு முன்பாகவே அவை குளுர்ச்சியால் திடமாக மாறிவிடும். பின் செரிமானமின்றி உடலிலேயே தங்கி கெட்ட கொழுப்புகள் சேர்ந்து உடல் பருமன் அதிகரிக்கும்.
குளுர்ச்சியான நீரைக் குடிப்பதால் அவை இதயத்திற்குச் செல்லும் நரம்பு மண்டலங்களை பாதித்து இதயத் துடிப்பை குறைக்கும். இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.