எச்சரிக்கை! ‘இந்த’ காய்கறி சாலட்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்..!!
காய்கறிகளை சாலட் வடிவில் சாப்பிடுவது நல்லது என்றாலும், அளவிற்கு மிஞ்சும் போது அமுதமும் நஞ்சு என கூறுவதுண்டு. மேலும், சில காய்கறிகளை சால்ட் வடிவில் பச்சையாக சாப்பிடுவது, நன்மைக்கு பதிலாக தீமை தான் வந்து சேர்க்கும்.
கத்தரிக்காயை சாலட் ஆக சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு. சாலட் ஆக கத்திரிக்காயை சாப்பிடுவது வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உருளைக்கிழங்கை பச்சையாக சாப்பிடுவது பல நோய்களை உண்டாக்கும். சமைக்காத உருளைக்கிழங்கில் சோலனைன் என்ற சிறப்பு வகை நச்சு உள்ளது. இது தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
சிலருக்கு வெண்டைக்காயை பச்சையாக சாப்பிடுவது படிக்கும். ஆனால் வெண்டைக்காயை சாலட் வடிவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். செரிமான அமைப்பை பாதித்து, கடுமையான வயிற்று வலி, வாய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
ப்ரோக்கோலி, கீரை போன்ற பச்சை காய்கறிகளை, சமைக்காமல் சாப்பிடுவது நல்லதல்ல. இந்த காய்கறிகளை தொடர்ந்து பல நட்களுக்கு பச்சையாக சாலட் வடிவில் சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.