ஆர்வ கோளாறுல அளவுக்கு அதிகமான பாதாம் சாப்பிடாதீங்க... ஆரோக்கியத்திற்கு கேடு
பாதாம்: ஊட்டச்சத்து நிறைந்த பவர்ஹவுஸ் என அழைக்கப்படும் பாதாம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், பல நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. ஆனால் பாதாமை அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். அதிக பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன, ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சிறுநீரக ஆரோக்கியம்: பாதாமில் அதிக அளவு ஆக்சலேட் உள்ளது. இது சிறுநீரக கற்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. அதோடு, சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால், அதிக பாதாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இரத்தப்போக்கு: பாதாமில் அதிக அளவு வைட்டமின் ஈ உள்ளது. வைட்டமின் ஈ இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பாதாம் பருப்பை அதிகமாக சாப்பிடுவதால், ரத்தம் உறைவதைத் தடுக்கலாம். இது அதிக இரத்தப்போக்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும்.
உடல் பருமன்: பாதாம் பருப்பை அதிகமாக சாப்பிடுபவர்களின் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பாதாமில் அதிக கலோரிகள் உள்ளன. சுமார் 1 அவுன்ஸ் பாதாம் பருப்பில் 160 கலோரிகள் உள்ளன.
மலச்சிக்கல்: பாதாமில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அளவிற்கு அதிகமான நார்சத்து ஜீரணத்தை பாதிக்கும். அதிகப்படியான பாதாம் சாப்பிடுவது சில சமயங்களில் மலச்சிக்கலை உண்டாக்கும். வாந்தி போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்
வாயு மற்றும் நெஞ்செரிச்சல்: அதிகப்படியான பாதாம் சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் மற்றும் வாயு அமிலத்தன்மை ஏற்படலாம். அமில ரிஃப்ளக்ஸ் அல்லது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயால் (GERD) பாதிக்கப்படுபவர்கள் பாதாம் பருப்பை சிறிய அளவில் சாப்பிட வேண்டும்.
ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடலாம்: ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் ஒரு நாளைக்கு 5-6 பாதாம் சாப்பிடலாம். தீவிர உடற்பயிற்சி செய்பவர்கள் 8-10 பாதாம் பருப்புகளை சாப்பிடலாம். எப்போதும் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது அதிக பலன் தரும். காலையில் வெறும் வயிற்றில் பாதாம் சாப்பிடுவது நன்மை பயக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.