Lemon Side Effects: எலுமிச்சை தரும் பக்க விளைவுகள்
அமிலத்தன்மை: அமிலத்தன்மை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி நீங்கள் எலுமிச்சை நீரை உட்கொள்ள விரும்பினால், வெதுவெதுப்பானதாக தண்ணீரில் எலுமிச்சை பிழிந்த பிறகு, தேனையும் சேர்த்து உட்கொள்ளலாம்.
வாய் புண்: உங்களுக்கு வாய் புண் இருந்தால் நீங்கள் எலுமிச்சை சாப்பிடடுவதை தவிர்க்கவும். நீங்கள் எலுமிச்சை சாப்பிட்டால், அது எரிச்சல் மற்றும் வீக்கம் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
சிறுநீரக பிரச்சனை: உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருந்தால், நீங்கள் கண்டிப்பாக எலுமிச்சை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நெஞ்சிஎரிச்சலை உண்டாகுக்கும்: எலுமிச்சை சாறு வயிறு உபாதைகளை தீர்க்கும் அதிகமாக பயன்படுத்தினால் அதில் உள்ள சிட்ரிக் அமிலம் நெஞ்சிஎரிச்சலை உண்டாக்கி விடும்.
சருமத்தை வறட்சியாக்கும்: எலுமிச்சை சாற்றை முகத்தில் தேய்க்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சிசுக்களை நீக்கும்.வறட்சியான அல்லது எண்ணெய் பிசுக்கு குறைவான சருமத்தில் தேய்க்கும் போது அது சருமத்தை மேலும் வறட்சியாக்கும்.