வைட்டமின் பி12 அதிகமாக எடுத்து கொண்டால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமா?
வைட்டமின் பி12 அளவு உடலில் அதிகரித்தால் இரத்த உறைதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உடலில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. மேலும் நரம்பு மண்டலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
உடல் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். வைட்டமின் பி12 ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடலில் வைட்டமின் பி12 அளவு குறைந்தால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடல் பலவீனம் முதல் பல்வேறு நோய்கள் உடலில் ஏற்படுகிறது.
வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக முடி உதிர்தல், கை கால் வலி, வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதே வேளையில் வைட்டமின் பி12 அதிகமாக எடுத்து கொண்டால் கூடுதல் பாதிப்பு ஏற்படுகிறது.
வைட்டமின் பி12 அதிகரிக்கும் போது குமட்டல், வாந்தி, தோலில் சிவப்பு புள்ளிகள், தொடர் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இது போன்ற அறிகுறிகள் அதிகம் இருந்தால் மீன் மற்றும் கடல் உணவு, பால் மற்றும் பால் பொருட்கள், சிக்கன் மற்றும் மட்டன் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.