Simbu: சிறுவயதில் செம க்யூட்டாக இருக்கும் சிம்பு..! வைரலாகும் புகைப்படங்கள்..
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர் சிலம்பரசன். டி.ராஜேந்தரின் மகனான இவர், சிறுவயது முதலே நடித்து வருகிறார்.
1983ஆம் ஆண்டில் பிறந்த இவருக்கு தற்போது 41வயது ஆகிறது. இன்று இவர் பிறந்தநாள் கொண்டாடுவதை ஒட்டி, பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சிம்பு, 1 வயது முதலே படங்களில் நடித்து வருகிறார். சிலம்பரசனுக்கு குரலசரன் என்ற தம்பியும் இலக்கியா என்ற தங்கையும் உள்ளனர்.
சிம்புவின் 48வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது.
பல ஹிட் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ள சிம்பு, சினிமாவில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு பிரேக் எடுத்தார். அப்போது அதிக எடையுடன் காணப்பட்டார்.
மீண்டும் சினிமாவிற்குள் கம்-பேக் கொடுத்த அவர், உடல் எடையை குறைத்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
சிம்புவின் பிறந்தநாளையொட்டி அவரது சிறுவயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.