உங்களை மகிழ்ச்சியான பணக்காரர் ஆக்கும் 6 முதலீடுகள்! இதற்கு பணம் தேவையில்லை..
)
நம்மில் பெரும்பாலானோர், வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், ரியாலிட்டி பெரும்பாலானோருக்கு அப்படி இருப்பதில்லை. ஒரு சில விஷயங்களை கற்றுக்கொண்டால் அல்லது அவற்றில் முதலீடு செய்தால்தான் நம் வாழ்க்கை மேம்படும் என நமக்கு தெரியும். இருப்பினும் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இருப்போம். எனவே, உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த, கட்டாயமாக நீங்கள் சில விஷயங்களில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம். அவை என்னென்ன தெரியுமா?
)
உங்களுக்குள் நீங்கள் முதலில் முதலீடு செய்ய வேண்டும். திறன் பயிற்சி, பிடித்ததை படிப்பது, எவ்வளவு எக்ஸ்ட்ரா கோர்ஸ் படிக்க வேண்டுமோ அதனை படித்து வைத்துக்கொள்வது நல்லது. இதனால் நீங்கள் உங்களை மெருகேற்றிக்கொள்வதோடு, வாழ்வில் பெரிய இடத்தையும் அடைய முடியும்.
)
பணம் நமக்கு மகிழ்ச்சியை தராது என சிலர் கூறுவர். ஆனால், உண்மையில் கையில் பணம் இருந்தால்தான் நம்மால் பல விஷயங்களை அனுபவிக்க முடியும். பயணம் செய்வதில், உங்களுக்கு பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் முதலீடு செய்யுங்கள்.
உங்களை சுற்றி இருப்பவர்களை, உங்கள் மீது அன்பு கொண்டு இருப்பவர்களை மதித்து அவர்களுக்காக நீங்கள் நேரம் ஒதுக்குவதும் ஒரு வித முதலீடுதான். அதே போல, பெரிய இடத்தில் இருப்பவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதும் ஒரு வித முதலீடே! எனவே, அதிலும் கவனம் செலுத்துங்கள்.
உங்களுக்கு என்னென்ன விஷயங்கள் வாழ்வில் கிடைத்துள்ளதோ, அதனை இந்த சமூகத்திற்கும் கொஞ்சம் திரும்ப செலுத்த வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவும் சமூகத்திற்கு திரும்ப செலுத்தினால், உங்களுக்கும் மகிழ்ச்சி பிறக்கும்.
பட்ஜெட், முதலீடுகள், பணத்தை ரெட்டிப்பாக்குவது குறித்த விஷயங்களை கற்று வைத்துக்கொள்ள வேண்டும். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், சொத்துகளை சேர்ப்பது போன்ற விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
உங்கள் உடல், மிகவும் முக்கியம். எனவே, உங்கள் உடலில் முதலீடு செய்யுங்கள். காலையில் என்ன வர்க்-அவுட் செய்ய வேண்டும் என்பது முதல், என்ன சாப்பிட வேண்டும் என்பது வரை கற்று வைத்துக்கொள்ளுங்கள். இதனால், நீங்கள் ஹெல்தியாக இருக்கலாம். அதே போல, இன்சூரன்ஸ் குறித்தும் கற்றுக்கொள்ள வேண்டும்.