சனி பெயர்ச்சி 2025... ஏழரை நாட்டு சனி பாதிப்பு விலக... ராசிக்கு ஏற்ற சில எளிய பரிகாரங்கள்
மேஷம்: சனிபகவானை மகிழ்விக்க, ஹனுமனுக்கு வெற்றிலையில் மாலை கட்டி சாற்றுவது பலன் தரும். ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் ஹனுமனை பூஜித்து வழிபடுவதும், ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்வதும் பலன் தரும்.
ரிஷபம்: சனிபகவானின் மனதை குளிர்விக்க, ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வதும், துர்கா சப்தசதியை பாராயணம் செய்வதும் பலன் தரும். வாழ்க்கையின் தடைகள் அனைத்தும் நீங்கும்.
மிதுனம்: சனி பகவானை மகிழ்விக்க விக்னங்களை தீர்க்கும் விக்னேஸ்வரரை வணங்கினால் நன்மை அடையலாம்/எறும்புகள் மற்றும் காகங்களுக்கு உணவளிப்பதும், ராம பக்தனான ஹனுமனை வணங்குவதும் பலன் தரும்.
கடகம்: சனிபகவானை மகிழ்விக்க, வன்னி மர செடியை நட்டு வணங்கி வரலாம். சிவலிங்கத்திற்கு பிரதோஷ காலத்தில் பூக்கள் அல்லது வில்வம் கொண்டு அர்ச்சனை செய்து, சங்கரரின் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபிப்பது பலன் தரும்.
சிம்மம்: சனிபகவானை மகிழ்விக்க ஒவ்வொரு அமாவாசையிலும் ஏழை பிராமணர்களுக்கு உணவளிக்கவும். இதனால் பித்ருக்கள் மற்றும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.
கன்னி: சனீஸ்வரனை மகிழ்விக்க, ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பசுவிற்கு தீவனம் கொடுக்க வேண்டும். சனி, செவ்வாய் கிழமைகளில் ஹனுமனை வழிபடுவதும் பலன் தரும்
துலாம்: ஏழரை சனியின் பாதிப்பு நீங்க, வைத்தியம் செய்ய முடியாமல் வருந்தும் ஏழை நோயாளிக்கும் சிகிச்சிஅ பெற உதவலாம். இது தவிர மருத்துவமனைக்குச் சென்று போர்வைகளை தானமாக வழங்க வேண்டும்.
விருச்சிகம்: குலதெய்வத்தின் பரிபூரண அருளாசி பெற்றவர்களுக்கு சனியால் ஏற்படும் பாதிப்புகள் வெகுவாக குறையும் என்பது ஐதீகம். ஆற்றங்கரைக்குச் சென்று சனி பூஜை செய்து மீன்களுக்கு உணவு வழங்குவதும் பலன் தரும்.
தனுசு: ஏழரை சனி பாதிப்பு நீங்க, கோவிலை சுத்தம் செய்து, ஆன்மீக சேவை செய்யலாம். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வதும் பலன் தரும். கரு நிற விலங்குகளுக்கு பறவைகளுக்கு உணவளிப்பதும் பலன் தரும்
மகரம்: விக்னங்களை தீர்க்கும் விநாயகரை பிரார்த்திப்போரை ஏழரை சனி பாதிக்காது என்பது ஐதீகம். அதோடு சனி சாலிசா, சனி ஸ்தோத்திரம் அல்லது சனி தசரத்கிருத ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும் நல்லது.
கும்பம்: கிரக பாதிப்புகள் அனைத்தையும் நீக்கும் கோளறு பதிகம் பாராயணம் செய்வது பலன் தரும். சனி பகவானை மகிழ்விக்க, ஏழை எளியவர்களுக்கு உணவு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை தானம் செய்யுங்கள்.
மீனம்: சனிபகவானை மகிழ்விக்க, சனிபகவான் ஸ்தோத்திரத்தை சனிக்கிழமை 11 முறை பாராயணம் செய்தால் சனியின் பாதிப்பு நீங்கும். சனியன்று விரதம் இருந்து, காகம், கருப்பு நிற பசு அல்லது கருப்பு நாய்க்கு உணவளிக்கவும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.