ஆதார் அட்டையில் இருக்கும் போட்டோ பிடிக்கவில்லையா? இந்த வழியில் சுலபமாக மாற்றலாம்
ஆதார் அட்டையில் உங்கள் புகைப்படத்தை மாற்ற விரும்பினால், அதை எளிதாக செய்யலாம். யு.ஐ.டி.ஏ.ஐ ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் புகைப்படங்களைப் புதுப்பிக்க அனுமதிக்கிறது. இதற்கு நீங்கள் ஆன்லைனில் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அருகிலுள்ள ஆதார் மையங்களுக்குச் சென்று இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.
முதலில் UIDAI இணையதளத்தில் லாக் இன் செய்து ஆதார் அட்டை படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் எண்ணை எழுதவும். அதன் பிறகு அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் செல்லவும். உங்கள் படிவத்தை அங்கு சமர்ப்பிக்கவும். இதற்கு வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியமாகும்.
ஆதார் மையங்களுக்கு உங்களுடன் ஆதார் அட்டையை எடுத்துச் செல்லுங்கள். அங்கு இருக்கும் ஊழியர் ஆதார் அட்டை வைத்திருப்பவரின் புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை எடுத்துக்கொள்வார். இதற்குப் பிறகு உங்கள் யுஆர்என் (புதுப்பிப்பு கோரிக்கை எண்) அடங்கிய ஒப்புதல் சீட்டு உங்களுக்கு வழங்கப்படும். ஆதார் நிலையைச் சரிபார்க்க URN-ஐப் பயன்படுத்தலாம்.
அனைத்து தகவல்களும் அதன் புதுப்பித்தலுக்காக பெங்களூரு மையத்தை சென்றடையும். பின்னர் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை இரண்டு வாரங்களுக்குள் உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரியை அடையும். புகைப்படத்தை மாற்ற ரூ.25 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும். புகைப்படத்தை ஆன்லைனில் மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். இந்த செயல்முறை முகவரி மாற்றத்திற்கு மட்டுமே என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.