வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க... எளிய ‘ரோஜா’ பரிகாரங்கள்!

Wed, 01 Nov 2023-11:21 pm,

பண வரவு அதிகரிக்க: ஒரு ரோஜா மலரில் கற்பூரத்தை ஏற்றவும். கற்பூரம் எரித்த பிறகு, அந்த மலரை லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கவும். வெள்ளிக்கிழமை மாலையில் இவ்வாறு செய்வதன் மூலம் பண வரவு அதிகரிக்கும்.

ஆசைகள் நிறைவேற: பகவான் ஹனுமனுக்கு, சுக்ல பக்ஷத்தின் முதல் செவ்வாய்கிழமையன்று,  11 புதிய ரோஜா பூக்களை அர்ப்பணிக்கவும். இதை தொடர்ந்து 11 செவ்வாய் கிழமைகள் செய்யவும். ஹனுமான் மகிழ்ச்சியடைந்து உங்கள் மன ஆசைகளை நிறைவேற்றுவார்.

பண விரயத்தை தடுக்க: சிவப்பு துணியில் சந்தனம், சிவப்பு ரோஜா மற்றும்  குங்குமத்தை வைத்து கட்டி அதை வீடு அல்லது கடையில் உள்ள பெட்டகத்தில் வைக்கவும். செவ்வாய்கிழமை அன்று இதனை செய்வது சிறப்பு. இதனால், பணம் விரயம் ஆகாமல் இருக்கும்.

நோய் குணமாக: வீட்டில்யாருக்கேனும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், வெற்றிலையில் ரோஜா பூக்கள் நோயாளிக்கு  திருஷ்டி சுற்றுவது போல் 11 முறை சுற்றி நாற்சந்தியில் போடவும், திருஷ்டி கழிந்து உடல் நிலை சீராகும்.

கடனில் இருந்து விடுபட: ஒரு வெள்ளைத் துணியில் நான்கு மூலைகளிலும் ரோஜாக்களை வைத்து கட்டவும். அந்த துணையின் நடுவில் ஒரு ரோஜாவை வைத்து கட்டவும். பின்னர், ஓடும் ஆற்றில் எறிந்து விடுங்கள்.  இதன் மூலம் கடனில் இருந்து விரைவில் விடுபடலாம்.

சிவப்பு பூக்கள் கொண்ட தாவரங்களை வைத்திருப்பதற்கு தெற்கு ஒரு இணக்கமான திசையாகும். ரோஜா போன்ற பூச்செடிகளை வீட்டின் தென்மேற்கு மூலையில் வளர்க்க வேண்டும். இது வீட்டின் உரிமையாளரின் சமூக அந்தஸ்தை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link