வாட்ஸ்அப் மூலம் SBI வங்கியின் பேலன்ஸ் செக் செய்ய எளிய வழிகள்!
வாட்ஸ் அப் பேங்கிங்கை ஆக்டிவேட் செய்ய முதலில் "WAREG (உங்களது வங்கி கணக்கு எண்)" என டைப் செய்து 917208933148 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் செய்ய வேண்டும்.
நீங்கள் அனுப்பிய எஸ்எம்எஸ்-க்கு பதில் வந்ததும், உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட வாட்ஸ் அப் எண்ணிலிருந்து 'HI' என்று நீங்கள் மெசேஜ் அனுப்ப வேண்டும்.
அதன் பிறகு உங்களது வாட்ஸ் அப் திரையில் ஒரு மெசேஜ் வரும் அதில் 1) Account Balance, 2) Mini Statement மற்றும் 3) De-register from Whatsapp Banking என்கிற 3 ஆப்ஷன்கள் இருக்கும்.
இப்போது உங்கள் வங்கி கணக்கின் இருப்பை தெரிந்துகொள்ள விரும்பினால் 1 என்று டைப் செய்து மெசேஜ் செய்ய வேண்டும், மினி ஸ்டேட்மென்ட் பெற விரும்பினால் 2 என்று டைப் செய்து மெசேஜ் செய்ய வேண்டும் மற்றும் வாட்ஸ் அப் பேங்கிங்கை நீங்கள் டீ-ஆக்டிவேட் செய்ய விரும்பினால் 3 என்று டைப் செய்து மெசேஜ் செய்ய வேண்டும்