SJSGC: வீட்டிற்கு ஒரு பெண்ணுக்கு மட்டும் மாதம் 35000 ரூபாய் வழங்கும் மத்திய அரசின் திட்டம்!
பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) உயர்கல்வித் துறையின் சாவித்ரிபாய் ஜோதிராவ் ஃபுலே பெல்லோஷிப் திட்டம் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்வதற்காக Ph.D படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குகிறது.
'ஒற்றை பெண் குழந்தை' கல்வி உதவித்தொகை திட்டம் என்பது, குடும்பத்தில் சகோதரன் இல்லாத பெண் குழந்தைக்கு வழங்கும் திட்டமாகும். ஆண் குழந்தைகள் இல்லாத வீட்டில், ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தாலும், வீட்டிற்கு ஒரு பெண்ணுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை கொடுக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், எவ்வளவு மாணவிகளுக்கு உதவித்தொகை கொடுப்பது என்பது தொடர்பான எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைனில் பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
பட்டப்படிப்புக்குப் பிறகு மேல்படிப்பை தொடர விரும்பும் பெண், மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்தாலும், இந்த திட்டத்தில் சேர ரூபாய் 100 மதிப்புள்ள முத்திரைத்தாளில் உறுதிமொழி பத்திரத்தை மாணவியின் பெற்றோர்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அந்த உறுதிமொழியானது மாஜிஸ்திரேட் அல்லது தாசில்தார் வகுப்பு அரசு ஊழியர்களால் சான்றளிக்கப்பட வேண்டும்.
மாணவியிடம் ஆதார், வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் இருப்பது அவசியம். இந்த திட்டத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (Junior Research Fellow) மாணவிகளுக்கு ஆண்டுகளுக்கு மாதம் 31 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
சீனியர் ஆராய்ச்சி மாணவிகளுக்கு 35 ஆயிரம் நிதியுதவி கிடைக்கும்
மாற்று திறனாளிகளுக்கு, 31 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக மாதம் 35 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி அல்லது நிறுவனத்தில் முழு நேர PhD படிப்பு படிக்க வேண்டும். பகுதி நேரமோ அல்லது தொலைதூர PhD கல்வி பயிலும் மாணவிகள் , சாவித்ரிபாய் ஜோதிராவ் ஃபுலே பெல்லோஷிப் திட்டத்திற்கு தகுதி பெற மாட்டார்கள். NACC சான்றிதழ் பெற்ற மத்திய மாநில பல்கலைக்கழகங்கள் அல்லது நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் பிஎச்டி செய்யவேண்டும்.
40 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ் டி/ஓ பி சி மற்றும் PWD வகுப்பை சேர்ந்த மாணவிகளுக்கு 45 வயது வரை தளர்வு உண்டு.