SIP Calculator: ரூ.50,000 முதலீட்டை ரூ.5 கோடியாக்கும் 40x20x50 பார்முலா...
Mutual Fund: மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி பலரின் பல கனவுகளை நனவாக்கியுள்ளது. SIP கடந்த பல ஆண்டுகளாக நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தை அளித்து வருகிறது என AMFI தரவுகள் கூறுகின்றன.. SIP பலனை உண்மையாக அனுபவிக்க, முடிந்தவரை முதலீட்டினை தொடர வேண்டும்.
பல கோடி ரூபாய் நிதி: காலம் யாருக்காவும் காத்திருப்பதில்லை. உங்களால் முடிந்த அளவு முதலீட்டை சீக்கிரமாக தொடங்கவும். SIP இளம் வயதில் தொடங்க முடியவில்லை என்றால், அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. உங்கள் 40 வயதில் தொடங்கினாலும், உங்கள் ஓய்வு பெறும் காலத்திற்கான பல கோடி ரூபாய் நிதியை உருவாக்கலாம்.
எஸ்ஐபியின் 40x20x50 ஃபார்முலா: 40 வயதில் SIP ஐத் தொடங்கும் நிலையில் ஓய்வு பெறும் வயதில் அதாவது 60 வயதிற்குள் 5 கோடி ரூபாய் நிதியை உருவாக்க எஸ்ஐபியின் 40x20x50 ஃபார்முலா உதவும். இதில் மாதம் ரூ.50,000 முதலீடு செய்ய வேண்டும். எனினும், இதில் பாதியளவு முதலீடு செய்தால் கூட கோடிகளில் கார்பஸ் சேரும்.
20 ஆண்டுகள் தொடர் முதலீடு: எஸ்ஐபியின் 40x20x50 ஃபார்முலாவில், 40 என்றால் எஸ்ஐபி தொடங்குவதற்கான வயது, 20 என்றால் 20 ஆண்டுகள் வரை தொடர் முதலீடு மற்றும் 50 என்றால் மாதம் ரூ.50,000 எஸ்ஐபி. இந்த ஃபார்முலாவைப் பின்பற்றி முதலீடு செய்யத் தொடங்கினால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது உங்களுக்கு 60 வயதாகும் போது, ரூ.5 கோடி நிதியைக் சேர்க்கலாம்.
20 ஆண்டுகளில் ரூ.5 கோடி: 20 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 12 சதவீதம் வருமானம் கிடைத்தால் கூட, இந்த முதலீட்டின் மூலம் 20 ஆண்டுகளில் 5 கோடி ரூபாய் நிதியை எளிதாக உருவாக்கலாம்.
30 சதவீத வருமானம்: இந்தக் காலகட்டத்தில் சில பரஸ்பர நிதியங்கள் 20 முதல் 30 சதவீதம் வரை கூட வருமானம் கொடுக்கின்றன. அவ்வாறு இருந்தால், சில ஆண்டுகளிலேயே கோடிகள் சேர்ந்து விடும்.
முக்கிய குறிப்பு: பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. SIP என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாக இருப்பதால், அதன் வருமானமும் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.