புதுமுக இயக்குநருடன் கைக்கோர்க்கும் சிவகார்த்திகேயன்!

Mon, 20 Nov 2023-3:24 pm,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறியுள்ளவர், சிவகார்த்திகேயன். 

கடைசியாக இவர் நடிப்பில் மாவீரன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. 

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயலான்’ திரைப்படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. 

இவரது 21வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இவர் ஏற்கனவே ரங்கூன் எனும் படத்தை இயக்கியுள்ளார். 

சிவகார்த்திகேயனின் 21வது படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. 

சிவகார்த்திகேயன் பிசியாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். இவரது அடுத்த படம் குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது. 

குட் நைட் படத்தை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமான விநாயக் சந்திரசேகரன், சிவகார்த்திகேயனின் ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link