தலைவலி தருபவர்களை வாழ்க்கையில் இருந்து தள்ளி வைக்க 8 வழிகள்!!
அமைதியாக இருங்கள்:
உங்களுக்கு ஒருவர் மிகவும் தலைவலி கொடுக்கிறார் என்றால், அவர் கூறும் விஷயங்களுக்கு உடனடியாக ரியாக்ட் செய்வதை நிறுத்துங்கள். அமைதியாக, மூச்சு விடுவதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
கேட்கலாம்:
அவர்கள் பேசுவதற்கு நீங்கள் பதில் பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அமைதியாக, அந்த சண்டை அல்லது பிரச்சனைக்குரிய நபர் அதை கடந்து போகும் வரை என்ன நடக்கிறது என்பதை காது கொடுத்து கேளுங்கள்.
மரியாதையுடன் நடத்த வேண்டும்:
சண்டை, எவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றாலும் நீங்கள் பேசும் தொனியை மாற்றாமல் மரியாதையாக பேசவும்.
நகைச்சுவை:
அந்த சண்டையின் தீவிரத்தை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல நகைச்சுவை செய்து, அந்த சூழலை லைட் ஆக்கலாம்.
பேசுவதில் எல்லை:
அவர்களுடன் என்ன பேச வேண்டுமோ அதை மட்டும் பேசுங்கள். முக்கியமான விஷயங்களுக்கு மட்டும் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
தீர்வு:
பிரச்சனைகளை மட்டுமே அவர்களிடம் பேசுவதை விட்டுவிட்டு, தீர்வுகளை காண்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
கடந்து சென்று விடுங்கள்:
உங்களிடம் அந்த நபரை எதிர்கொள்ள சக்தி இல்லை என்று தோன்றினால், அவர்களிடம் “இது குறித்து பிறகு பேசலாம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து கடந்து சென்று விடுங்கள்.
புரிதல்:
எதிரில் இருக்கும் நபர், ஏன் இப்படி இருக்கிறார் என்பதையும் உங்களால் அவர் எந்த வகையில் பாதிக்க பட்டிருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.