Smartphone Battery: செல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க சில டிப்ஸ்!

Sun, 30 Jan 2022-7:42 pm,

நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இணையத்தில் சர்ஃபிங் செய்கிறீர்கள் என்றால், உங்கள் தொலைபேசியின் செயலி முழு வேகத்தில் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்கள் தொலைபேசியின் அமைப்புகளில் உள்ள பேட்டரி ஆப்ஷனுக்கு சென்று, 'Enhanced Processing' ஆப்ஷனை ஆஃப் செய்யவும்.

 

உங்கள் ஸ்மார்ட்போனில் பேஸ்புக், யூடியூப் மற்றும் இதுபோன்ற பிற பயன்பாடுகளிலிருந்து புஷ் நோடிபிகேஷன் வந்தால், அவை அதிக பேட்டரியை சாப்பிட்டு விடும்.  செட்டிங்ஸ் சென்று  நீங்கள் அதிகம் பயன்படுத்தாத செயலிகளின் புஷ் நோடிபிகேஷனை ஆப் செய்து பேட்டரியைச் சேமிக்கவும்.

Wifi பயன்படுத்துவததன் மூலம் உங்கள் மொபைல் டேட்டாவைச் சேமிக்கலாம். ஆனால் போனின் பேட்டரி மிகவும் வீணாகிறது. வைஃபையை ஆனில் வைத்திருந்தால், பேட்டரி வேகமாக ட்ரெயின் ஆகும், எனவே தேவைப்படும் போது மட்டும் வைஃபை ஆப்ஷனை ஆன் செய்யவும், மீதமுள்ள நேரத்தில் அதை ஆஃப் செய்யவும்.

கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை உபயோகித்த பிறகு ஷட் டவுன் செய்வது போல, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆப்ஸ்களை பயன்படுத்திய பிறகு மூடிவிடவும். செயலிகள் பின்புலத்தில் கூட இயங்கிக் கொண்டே இருப்பதால்,  ஃபோனின் பேட்டரியை அவை சாப்பிடுகின்றன.

உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி வேகமாக ட்ரையின் ஆகிய நிலையில், பேட்டரியை சேமிக்க விரும்பினால், ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ள பவர் சேவிங் மோடை (power saving mode) பயன்படுத்தவும், இது தொலைபேசியின் பேட்டரியை சேமிக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link