10ஆவது மாடியில் இருந்து போட்டாலும் உடையாது - ஸ்மார்ட்போனை பாதுகாக்க இதோ 5 வழிகள்!
)
சிலிக்கான் கவர்
வெறும் 100 - 200 ரூபாய்க்கு இந்த சிலிக்கான் கவர்கள் கிடைக்கின்றன. இது மென்மையாக இருக்கும். அதுமட்டுமின்றி, மிகவும் நெகிழ்வு தன்மையுடனும் இருந்து உங்கள் போனுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மேலும், போனின் உங்களின் கையில் இருந்து வழுக்காமல் நல்ல க்ரீப் உடன் இருக்கும்.
)
மேக்னடிக் கவர்கள் (Magnetic Cover)
மேக்னடிக் கவர்கள் சற்று விலை அதிகம். ஆனால், அவை ஸ்மார்ட்போனுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குகின்றன. அவை மிகவும் கடினமானவை மற்றும் ஸ்மார்ட்போனில் பொருத்துவதும் மிகவும் எளிமையானவை. ஒரு மேக்னடிக் கவரின் விலை ரூ.500 முதல் ரூ.1500 வரை இருக்கும்.
)
லெதர் கவர்கள்
லெதர் கவர்கள் மிகவும் வலிமையானவை. லெதர் கவர்கள் எளிய மக்களின் பட்ஜெட்டுக்குள் இருக்கும். இதன் விலை ரூ.100 - 500 தான். இந்த கவர் ஸ்மார்ட்போனை புத்தகம் போல மறைத்திருக்கும். இவை, போனை தூசியிலிருந்தும் பாதுகாக்கிறது.
5D டெம்பர்ட் கிளாஸ்
5D டெம்பர்டு கிளாஸ்கள் தற்போது அதிகமாக புழக்கத்தில் வந்துவிட்டன. இவை சாதாரண டெம்பர்டு கிளாஸ்களை விட சற்று விலை அதிகம். வாடிக்கையாளர்கள் 200 முதல் 500 ரூபாய் வரை 5D டெம்பர்டு கிளாஸ்களை வாங்கலாம். இந்த வகை டெம்பர்ட் கிளாஸ்கள் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை பெரிதும் பாதுகாக்கின்றன. ஸ்மார்ட்போன் கீழே விழுந்தாலும், அது மொபைல் டிஸ்பிளேவை அபாரமாக பாதுகாக்கிறது.
அர்மோர் கவர்கள்
அர்மோர் கவர்கள் (Armor covers) என்பது பிளாஸ்டிக்கால் ஆனது. இவற்றின் பின்புறத்தில் அதிகமாக புடைப்பு வடிவங்கள் இடம்பெற்றிருக்கும். ஸ்மார்ட்போன் கீழே விழுந்தால், அதில் ஒரு கீறல் கூட ஏற்படாமல் இருக்க இந்த வடிவங்கள் பயன்படுகின்றன. இதன் விலை 100-400 ரூபாய் வரை இருக்கும்.