Golden Days! கோடீஸ்வரர் பி.ஆர்.ஷெட்டியின் ‘அது ஒரு கனாக்காலம்’

Sun, 19 Sep 2021-9:00 am,

பாவகுத்து ரகுராம் ஷெட்டி 1973ம் ஆண்டில் வெறுங்கையுடன், வளைகுடா நாட்டிற்கு வந்து, தனது திறமையால் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகப்பெரிய தனியார் சுகாதார சேவை அமைப்பை உருவாக்கினார். வெற்றியின் உச்சத்தில் இருந்தபோது, தொழிலதிபர் $ 3.15 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருந்தார். உலக பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்தார்.

கர்நாடகாவின் உடுப்பியில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பி.ஆர்.ஷெட்டி மருந்தாளுநர் கல்வியை கற்றார். அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றபோது, அவரிடம் இருந்தது $ 8 மற்றும் ஒரு பை மட்டுமே. அவரிடம் அப்போது இருந்த அந்த சொத்தும் திருட்டுப் போனது  

 Pics courtesy: Facebook

ஆடம்பரமான கார்கள் மற்றும் விண்டேஜ் வாகனங்கள் மீது பிஆர் ஷெட்டிக்கு மீளாக் காதல் இருந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடம்பரத்தின் அடையாளமாக கருதப்பட்ட மெர்சிடிஸ்-மேபாக் எம் 600 வைத்திருந்தார்  

பிஆர் ஷெட்டி, 2014ம் ஆண்டில் தனியார் ஜெட் விமானம் ஒன்றின் 50% உரிமைகளை 4.2 மில்லியன் டாலருக்கு வாங்கினார். Pics courtesy: Facebook

விருந்துகளை நடத்துவதற்காக புர்ஜ் கலீஃபாவில் இரண்டு தளங்களை வாங்கினார், முன்னாள் கோடீஸ்வரர் புர்ஜ் கலீஃபாவில் இரண்டு முழு தளங்களை $ 25 மில்லியனுக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. ஆடம்பரமான விருந்துகளை நடத்துவதற்காகவே இந்த சொத்தை வாங்கினார். Pics courtesy: Facebook

The muddy waters என்ற ஆராய்ச்சி நிறுவனம் என்எம்சி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியபோது பிஆர் ஷெட்டியின் தொழில் சாம்ராஜ்ஜியம் ஆட்டம் கண்டது. ஷெட்டியின் நிறுவனம் $ 4 மில்லியனுக்கும் அதிகமான கடன்களை வெளிப்படுத்தத் தவறிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது. அவர் தனது பெரும்பாலான சொத்துக்களையும் நிறுவனத்தையும் இழந்தார், அவர் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நுழைவதற்கு ஷெட்டிக்குக் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு முன்னணி நாளிதழின் அறிக்கையின்படி, ஷெட்டி வளைகுடா நாட்டிற்கு மீண்டும் திரும்பி கெட்டுப்போன தனது நல்மதிப்பை மீண்டும் பெறுவேன் என்று சபதம் செய்திருக்கிறார்.

Pics courtesy: Facebook

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link