உலகின் மிக ஆபத்தான… திகிலான தரையிறக்கங்களைக் கொண்ட விமான நிலையங்கள்!!

Thu, 13 Aug 2020-4:58 pm,

சமீபத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான கோழிக்கோடு விமான நிலையமும் மிகவும் ஆபத்தான விமான நிலையமாகும். 2,700 மீட்டர் ஓடுபாதைக் கொண்ட இந்த விமான நிலையத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் தான் பெரிய விமானங்களின் இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. மழை காலங்களில் இந்த ஓடு பாதை மிகவும் ஆபத்தானதாக மாறிவிடுகிறது.

சாபாவின் ஜுவான்கோ விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்குவது பலவீனமான விமானிகளால் முடியாத காரியமாகும். இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை உலகின் மிகக் குறுகிய ஓடுபாதையாகும். இதன் நீளம் சுமார் 396 மீட்டர் ஆகும். இந்த ஓடுபாதை ஒரு மலை குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது, மூன்று பக்கங்களில் கடலால் சூழப்பட்டுள்ளது மற்றும் ஒரு புறத்தில் மலை உச்சி உள்ளது.

 

ஹாங்காங்கின் காய் டக் விமான நிலையமும் மிகவும் ஆபத்தான விமான நிலையங்களில் ஒன்றாகும். இந்த விமானம் 1925 முதல் 1998 வரை விமானங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. ஆனால் இப்போது இந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் இருபுறமும் உயரமான கட்டிடங்கள் இருந்தன. பொதுவாக விமான நிலையத்தைச் சுற்றி உயரமான கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்த விமான நிலையத்தின் ஓடுபாதையும் மிகக் குறுகியதாக இருந்தது.

நேபாளத்தின் டென்சிங்-ஹிலாரி விமான நிலையம் இமயமலையின் சிகரங்களுக்கிடையில் உள்ள லுக்லா நகரில் அமைந்துள்ளது. இதன் ஓடுபாதை நீளம் வெறும் 460 மீட்டர். சிறிய விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மட்டுமே டென்சிங்-ஹிலாரி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்தின் ஓடுபாதையின் வடக்கே மலை சிகரங்களும், தெற்கில் 600 மீட்டர் ஆழமான அகழியும் உள்ளன. அதனால்தான் இந்த விமான நிலையம் உலகின் மிக ஆபத்தான விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மாலே சர்வதேச விமான நிலையத்தில் பறப்பதும் விமானத்தை தரையிறக்குவதும் விமானிகளுக்கு மிகவும் சவாலானது. விமான நிலையம் கடற்கரையிலிருந்து இரண்டு மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் கடலின் நடுவில் அமைந்துள்ளது. இங்கே விமானிகளின் சிறிய கவனக்குறைவு கூட விமானத்தை நேரடியாக இந்தியப் பெருங்கடலில் இறக்கிவிடலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link