குறைந்த செலவில் இந்த நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலா செல்லலாம்!
இந்தோனேசியா: ரூபாய் 40,000 - 70,000 செலவில் இந்தோனேசியாவிற்கு சுற்றுலா செல்ல முடியும். குரங்கு வன சரணாலயம், போரோபுதூர் கோயில், பெசாகி கிரேட் கோயில், ராஜா ஆம்பட் தீவுகள் போன்ற இடங்களுக்கு செல்லலாம்.
தாய்லாந்து: டெல்லியில் இருந்து பாங்காக்கிற்கு செல்ல ரூ. 26,000 மட்டுமே செலவாகும். அங்கு காவ் யாய் தேசியப் பூங்கா, தி கிராண்ட் பேலஸ், பட்டாயா, புத்தர் கோயில் போன்ற இடங்களுக்கு செல்ல முடியும்.
கம்போடியா: இந்தியாவில் இருந்து கம்போடியா செல்ல ரூ. 41,000 செலவாகும். அங்கு அங்கோர் வாட், பேயோன் கோயில், ராயல் பேலஸ், ஏலக்காய் மலைகள் போன்ற இடங்களை சுற்றி பார்க்கலாம்.
நேபாளம்: ரூ. 29,000 முதல் ரூ. 37,000 செலவில் நேபாளத்தை சுற்றி பார்க்கலாம். அங்கு பசுபதிநாத் கோயில், புத்த ஸ்தூபம், காத்மாண்டு தர்பார் சதுக்கம், எவரெஸ்ட் மவுண்ட் மனாஸ்லு ஆகிய இடங்களுக்கு செல்லலாம்.
வியட்நாம்: டெல்லியில் இருந்து வியட்நாமிற்கு ரூ. 28,000 செலவில் சுற்றுலா செல்லலாம். அங்கு ஃபோங் நஹா–கு பாங் தேசிய பூங்கா, ஹோய் ஆன், ஃபூ குவோக் தீவு போன்ற இடங்களுக்கு செல்லலாம்.
இலங்கை: இந்தியாவில் இருந்து குறைந்த செலவில் சுற்றுலா செல்ல மற்றொரு ஏற்ற இடம் இலங்கை ஆகும். ரூ. 10,000 முதல் 18,000 செலவில் இலங்கைக்கு செல்ல முடியும்.