சிக்ஸர் அடிக்கும் இளைஞர்களுக்கு கால்கட்டு! கவலை வேண்டாம்! இது திருமண செண்டிமெண்ட் காலம்

Sun, 23 Jul 2023-10:58 pm,
wedcding

கட்டுக்கடங்கா காளையாய் சிக்ஸர் அடித்து, சிவனே என்று இருந்தவர்களுக்கு கால்கட்டுப் போட்டால் என்னவாகும்? ஜாலியால் செஞ்சுரி அடிப்பார்கள். 2023இல் வாழ்க்கையில் திருமண பந்தத்தில் இணைந்த சூப்பர் கிரிக்கெட்டர்கள் இவர்கள்...

shaheen afridi

ஷஹீன் அப்ரிடி

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியின் மகள்களில் ஒருவரான அன்ஷாவை மணந்தார். இந்த ஜோடி இந்த ஆண்டு பிப்ரவரி தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டது.

kl rahul

கேஎல் ராகுல்

இந்திய வீரர் கே.எல்.ராகுல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது நீண்ட நாள் காதலியான நடிகை அதியா ஷெட்டியை காதலித்தார். கண்டலாவில் நடந்த திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த ராகுலுக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லை.

அக்சர் படேல்

ராகுல் திருமணம் செய்துகொண்ட பிறகு, அக்சர் படேலின் திருமணம் நடந்தது. ஊட்டச்சத்து நிபுணரான மேஹா படேலை மணந்தார் அக்சர் படேல். அவருடைய திருமணம் வெகு விமரிசையாக, வதோத்ராவில் நடந்தது.

ஹரிஸ் ரவூப்

ஹரிஸ் ரவூப், முஸ்னா மசூத் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரின் மனைவி மாடல் அழகி என தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் தலைமைப் பயிற்சியாளருமான சக்லைன் முஷ்டாக்கின் மகளை ஷதாப் கான் மணந்ததார்

ஐடன் மார்க்ராம்

தென்னாப்பிரிக்கா பேட்டரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான ஐடன் மார்க்ரம் இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார். ஐடன் சமீபத்தில் நிக்கோலை மணந்தார். இந்த செய்தியை தம்பதியினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link