Met Gala 2022 நிகழ்ச்சியில் மிகவும் மோசமாக ஆடையணிந்து புருவம் சுளிக்க வைத்த பிரபலங்கள்
வின்னி ஹார்லோ வித்தியாசமான சிவப்பு உடையில் வந்திருந்தார். இந்த மினி டிரஸ், ஐரிஸ் வான் ஹெர்பனால் வடிவமைக்கப்பட்டது. வித்தியாசமானதாக இருந்தாலும், பார்வையாளர்களை ஈர்க்க முடியவில்லை.
(புகைப்படம்: ட்விட்டர்
மெட் காலா என்பது பிரபலங்கள் தங்களுடைய சிறந்த ஃபேஷனைக் கொண்டு வரும் இடமாகும், ஆனால் எம்மா மிகவும் தகுதியான ஆடை அணியவில்லை. எம்மாவின் குட்டையான ஆடை மெட் காலா போன்ற நிகழ்வுகளுக்கு பொருந்தமாக இல்லை.
(புகைப்படம்: AFP)
Fredrik Robertsson வெள்ளை மற்றும் கருப்பு நிற வித்டியாசமான ஆடையை அணிந்திருந்தார் ஃப்ரெட்ரிக் ராபர்ட்சன், இது ஜம்ப் சூட் உடையா அல்லது தேவதை உடையா என்பதை புரிந்துகொள்வது எளிதல்ல.
(புகைப்படம்: ட்விட்டர்)
சாரா ஜெசிகா பார்க்கர், கருப்பு மற்றும் வெள்ளை நிற பால் கவுனைத் தேர்ந்தெடுத்தார், அது ஒரு பெரிய தொப்பி நீண்ட விளிம்புகளைக் கொண்டதாக இருந்தது. ரீஜென்சி சகாப்தத்தை அடிப்படையாகக் கொண்ட பல திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் தோன்றிய ஒரு வில்லத்தனமான பாத்திரத்தின் தோற்றத்தை இந்த உடை அளித்தது.
(புகைப்படம்: AFP)
எம்மா கோரின் ஏன் இந்த ஆடையை ஃபேஷனின் மிகப்பெரிய இரவுக்காக அணிய வேண்டும் என்று நினைத்தாரோ தெரியவில்லை
(புகைப்படம்: AFP)
சோலி பெய்லியின் பச்சை நிற ஆடை பலராலும் விமர்சிக்கப்பட்டது.
(புகைப்படம்: AFP