வக்ர நிலையில் சனி... ‘இந்த’ ராசிகள் தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Fri, 08 Sep 2023-8:58 pm,

சனி வக்ரி 2023: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வக்ர நிலை அடையும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. பெயர்ச்சிகளை போலவே வக்ர நிலை, அஸ்தமனம், வக்ர நிவர்த்தி, உதயம் போன்றவை அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் பலன் எல்லா ராசிகளுக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும். 

நீதியின் கடவுளான சனி நவம்பர் 4 வரை கும்ப ராசியில் வக்ர நிலையில் இருப்பார். இது எல்லா ராசிக்காரர்களையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கும். சில ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் இழப்புகளைச் சந்திக்க நேரிடும். 

சனி பகவான் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணம், புகழை கொடுப்பதோடு, பெரும் முன்னேற்றத்தையும் தருவார். இவர்களுக்கு வேலை, வியபாரத்தில் வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

விருச்சிக ராசிக்காரர்கள் வேலைத் துறையில் பதவி உயர்வு அல்லது மாற்றத்திற்கான அறிகுறிகள் உள்ளன. இதன் காரணமாக பொருளாதார சிக்கலை தீர்க்க அதிக வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உள்ள மூத்த அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவார்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்களையும் பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கை கூடும் வாய்ப்பு உள்ளது. 

சிம்ம ராசிக்காரர்களுக்கு  தடைகள் அனைத்தும் விலகும். இதனுடன், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களும் நேர்மறையான, சாதகமான முடிவுகளைப் பெறுவார்கள். இதனுடன், வணிகத் துறையிலும் பெரிய வெற்றியைப் பெறலாம். நிதி சிக்கல்கள் நீங்கும். பொருளாதார நிலை மேம்படும். உங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு ராசிக்காரர்கள் பணியிடத்தில் புதிய வெற்றிகளை அடைய முடியும். மேலும், மாணவர்கள் கல்வித் துறையில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் தங்கள் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பல வகையான பிரச்சினைகள் தீர்க்கப்படலாம். இது மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். குடும்ப சூழ்நிலையும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link