முக்கிய மாற்றம் காணும் சனி, குரு: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வாழ்க்கை பிரகாசிக்கும்
ஏப்ரல் மாதத்தில் கிரகங்களின் குருவாக கருதப்படும் பிருஹஸ்பதி மற்றும் நீதியின் கடவுளாக கருதப்படும் சனி பகவான் ஆகிய இருவரும் மிகப்பெரிய மாற்றங்களைக் காண உள்ளனர்.
சனி நட்சத்திர பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரப்படி தற்போது ராகு மீன ராசியில் உள்ளார். அவர் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியில் இருப்பார். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் உள்ளார் . ஏப்ரல் மாதம் சனி பகவான் ராகுவின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் நுழைவார். அதன் பிறகு குரு பகவானின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வார் (Sani Nakshatra Peyarchi).
குரு நட்சத்திர பெயர்ச்சி: குரு பகவான் தன்னுடைய நட்பு கிரகங்களான சூரியன், செவ்வாய் மற்றும் சந்திரனின் நட்சத்திரங்களான கிருத்திகை, மிருகசீஷம் மற்றும் ரோகினி நட்சத்திரத்தில் (Guru Nakshatra Peyarchi) நுழைவார்.
சனி (Shani) மற்றும் குருவின் இந்த நட்சத்திர மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றங்களால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
குரு பகவான் மற்றும் சனி பகவானின் இந்த மாற்றங்களால் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான லாபம் உண்டாகும் . நிதிநிலை வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் நிலுவையில் இருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக முடிவடையும். வெற்றியுடன் உங்களுக்கு அபரிமிதமான பண லாபமும் கிடைக்கும். உங்கள் நம்பிக்கையால் வெற்றிகளை பெறுவீர்கள். உங்கள் ஆளுமையால் பலர் ஈர்க்கப்படுவார்கள். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்
சனி மற்றும் குருபகவானின் மாற்றங்களால் சிம்ம ராசிக்காரர்கள் மீது தனித்துவமான அருள் மழை பொழியும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த நோய்கள் இப்போது குணமாகும். மாணவர்களுக்கு இது ஏற்ற காலமாக இருக்கும். படிப்பில் நாட்டம் நன்றாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.
சனி மற்றும் குருவின் இந்த நட்சத்திர பெயர்ச்சிகளால் தனுசு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறுவார்கள். அபரிமிதமான வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப சூழல் அமைதியாக இருக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.