சம்மரில் சுகர் லெவலை கட்டுப்படுத்த இந்த டயட் பிளான் ட்ரை பண்ணுங்க: அசந்து போவீங்க
நீரிழிவு நோயாளிகள் கோடைக் காலத்தில் தங்கள் உணவுப் பழக்கத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு அவ்வப்போது உடல் சோர்வடைவது வழக்கம். இது வெயில் காலத்தில் இன்னும் அதிகமாகின்றது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிலர் லேசான உணவு அல்லது திரவ உணவை உட்கொள்கிறார்கள். கோடையில் சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
தண்ணீர்: நிரிழிவு நோயாளிகள் மட்டுமல்லாமல் அனைவருமே கோடைக் காலத்தில் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் நீரிழப்பு பிரச்சனை இல்லாமல் இருக்கும். மேலும், இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். அதிக தண்னீர் குடிப்பதால் உடலில் நச்சுகளும் எளிதாக வெளியேற்றப்படும். முடிந்த அளவிற்கு பகல் வேளையில் அதிக நீர் குடிப்பது நல்லது.
கற்றாழை: சருமத்திற்குப் பயன்படுத்தப்படும் கற்றாழை நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும். ஆயுர்வேதத்தின் படி, இதில் பல வித மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது நமது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆண்டிஆக்சிடெண்டுகள் கற்றாழையில் காணப்படுகின்றன. இதன் சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நமது செரிமானத்தையும் சரியாக வைக்கிறது.
மோர்: சர்க்கரை நோயாளிகள் வெயில் வாட்டி எடுக்கும் கோடைக்காலத்தில் மோர் அதிகம் குடிக்கலாம். இதில் உள்ள புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மோர் உடலுக்கு கோடையில் தேவையான குளிர்ச்சியை அளிக்கின்றது. இது அதிக உஷ்னத்தால் உடல் சோர்வடையாமல் தடுத்து புத்துணர்ச்சியை அளிக்கின்றது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
பச்சைக் காய்கறிகள்: கோடைக் காலத்தில் நீரிழிவு நோயாளிகள் கீரை போன்ற பச்சைக் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை இவற்றில் அதிகமாக இருக்கின்றன. இவை இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவியாக இருப்பதோடு உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
தக்காளி: தக்களி உட்கொள்வதால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதுடன் ஏகப்பட்ட சத்துகளும் கிடைக்கின்றன. கோடையில் சர்க்கரை நோயாளிகளும் தக்காளி சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். இதில் உள்ள கூறுகள் காரணமாக இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளின் ஆற்றல் குறையாமல் இருப்பதற்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.