சம்மரில் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க உதவும் அசத்தலான டிப்ஸ் இதோ
கோடை காலத்தில் நம் உடலின் செயல்பாட்டிற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகின்றது. இந்த காலத்தில் உடலில் ஆற்றலை தக்க வைத்துக்கொள்ளவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அதற்கேற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியமாகும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆனால், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது தண்ணீர் உட்கொள்வது மிக அவசியமாகும். நார்ச்சத்து உணவுகளை உட்கொண்டால் ஜீரணமாக அதிக நேரமாகும். காய்கள், பழங்கள், ஓட்ஸ், முழு தானியங்கள் ஆகிய நார்ச்சத்து நிறைந்த உண்வுகளை நீரிழிவு நோயாளிகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.
நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், கூடுதல் சர்க்கரையை வெளியேற்ற சிறுநீரகம் வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் அதிக நீரை உட்கொண்டால், சுறுநீர் மூலம் சர்க்கரை வெளியேற்றப்படுவது எளிதாகும். மெலும், கோடையில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் அவசியமாகும்.
கோடை காலத்தில் பெரும்பாலும் மக்கள் சாஃப்ட் ஜூஸ், இனிப்பு கலந்த பழச்சாறுகள் ஆகியவற்றை உட்கொள்கிறார்கள். ஆனால் இவற்றில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை அளவு நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் கோடை காலங்களில் இவற்றை தவிர்ப்பத் நல்லது.
கோடை காலத்தில் உடற்பயிற்சிகளை செய்து உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது நல்லது. ஏரோபிக்ஸ், யோகா, நடைப்பயிற்சி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு செய்ய வேண்டும். எனினும், விடிகாலை அல்லது மாலை, அதாவது வெயில் இல்லாத நேரத்தில்தான் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சுரைக்காயில் 92% தண்ணீர் மற்றும் 8% நார்ச்சத்து உள்ளது. இதில் குளுக்கோஸ் மற்றும் சர்க்கரை தொடர்பான கூறுகளின் அளவு மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. இந்த காரணங்களால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த காயாக அமைகிறது.
வெந்தயத்தில் நார்ச்சத்து மற்றும் பிற ஆரோக்கிய கூறுகள் உள்ளன. இதில் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. இது செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் உடல் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இயல்பு நிலையில் இருக்கின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.