சிம்ம ராசியில் சூரியன்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ‘சில’ ராசிகள்!
ஜோதிடத்தில் சூரிய பகவானுக்கு தனி இடம் உண்டு. ஆன்மா, தந்தை, மரியாதை, வெற்றி, முன்னேற்றம் மற்றும் அரசு மற்றும் அரசு சாரா துறைகளில் உயர் சேவை ஆகியவற்றின் காரக கிரகமாக சூரியன் கருதப்படுகிறது. ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகிறது. கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன், 30 நாட்களுக்குப் பிறகு, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். ஆகஸ்ட் 17ம் தேதி, சூரியன் கடக ராசியை விட்டு சிம்ம ராசியில் பிரவேசித்தார்.
சிம்மம்: சூரியன் சிம்ம ராசிக்கு 12வது வீட்டில் சஞ்சரித்துள்ளார். அப்படிப்பட்ட நிலையில் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த ராசி மாற்றம் பெரிய அளவில் நல்ல பலனை தரப்போவதில்லை. குறிப்பாக தொழிலதிபர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் தனது ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால், ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மகரம்: இந்த ராசிக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டில் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், இல்லாவிட்டால் குடும்பத் தகராறு ஏற்படலாம். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. முதலீட்டு முடிவை மிகவும் கவனமாக எடுங்கள். இந்த ராசிக்காரர்களும் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மீனம்: இந்த சூரியனின் பெயர்ச்சி மீன ராசியில் ஐந்தாம் வீட்டில் நடந்துள்ளது. இந்த வீடு குழந்தைகள் எதிர்காலம் தொடர்புடைய வீடு என்பதால், இந்த ராசிக்காரர்களின் குழந்தைகளின் வாழ்க்கையில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தலாம். வேலை செய்பவர்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். நிதி நிலைமை மோசமாக இருக்கலாம். எந்த முடிவையும் கவனமாக எடுங்கள்.
தனுசு: இந்த ராசியில் சூரியன் மாறுவதால் இந்த ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்படலாம். குறிப்பாக முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், அதை தற்போதைக்கு செப்டம்பர் 17 வரை ஒத்திவைக்கவும். அதே நேரத்தில், மேலும் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். அதே நேரத்தில், வேலை செய்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.