ஐப்பசிக்கு பிறகு கார்த்திகை மாதத்தை உருவாக்கும் சூரியன்! சூரியனின் விருச்சிக ராசி பெயர்ச்சி!

Sat, 26 Oct 2024-5:25 pm,

சூரியனின் ராசி மாற்றம் 12 ராசிகளில் 7 ராசிகளுக்கு சாதகமாக அமையும். இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றியும், மன உறுதியும் கிடைக்கும். 

மீன ராசிக்காரர்களுக்கு புதிய வீடு அல்லது சொத்து வாங்கும் வாய்ப்பை தரும் கார்த்திகை மாதத்தில் அன்னை லட்சுமி தேவியின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும்

சூரியனின் ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு  நல்ல செய்திகளைத் தரும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணத்தைத் திரும்பப் பெறலாம். 

கல்வியில் ஆர்வம் ஏற்படும். தொழில் சிறக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உற்றார் உறவினர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும், அனைவரிடமும் பாராட்டு கிடைக்கும்

பயணங்களின் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், தொழில் தொடர்பான புரிதல் உண்டாகும். தனுசு ராசியினர் மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்பட்டால் மகிழ்ச்சி பெருகும்.  

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடலாம். பொருளாதார நிலை வலுப்பெறும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திடீர் பண ஆதாயமும் கூடும்.  

துலாம் ராசிக்காரர்கள், நீண்ட நாட்களாக ஏதேனும் நோயால் அவதிப்பட்டு வந்தால் அது நீங்கி ஆரோக்கியம் சீராக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள்.

முதலீடு செய்வதற்கும் நேரம் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளில் வெற்றி கிடைக்கும். கன்னி ராசி வியாபாரிகளுக்கு நல்ல நேரம் இது

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். சமய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை வாய்ப்பு கிடைக்கும். 

ஆரோக்கியம் சீராக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள். கடக ராசிக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் சூரிய பெயர்ச்சி இது

மிதுன ராசிக்காரர்களுக்கு கார்த்திகை மாதம் அமர்க்களமாக இருக்கும். அனைவரின் அன்பையும் ஆதரவுகளையும் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் நல்ல செய்திகளைத் தரும். பெரிய நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன, நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாய் நிறைவேறும்

குடும்பத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். குடும்பத்தில் இருந்துவந்த சூழல் படிப்படியாக நல்லபடியாக மாறும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிணக்குகள் நீங்கும்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link