சூரிய தேவனின் அருளால் ‘இந்த’ ராசிகளுக்கு ஆனி மாதம் அட்டகாசமாய் இருக்கும்!

Mon, 19 Jun 2023-4:03 pm,

சூரியப் பெயர்ச்சி காரணமாக சிலரது வாழ்க்கையில் அற்புதமான கால கட்டம் தொடங்கி விட்டது எனலாம். சூரிய பெயர்ச்சியினால், பணம், புகழ், சம்பள உயர்வு, வேலை என அனைத்தையும் பெறும் சில ராசிகளை அறிந்து கொள்ளலாம்.

 

மேஷம்- குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். அலுவலகத்தில் பனி சுமை இருந்தாலும், கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பிரச்சினைகள் எதையும் சந்திக்க வேண்டிய நிலை வராது. அப்படியே வந்தாலும் எளிதாக சமாளித்து விடுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

ரிஷபம்- அரசு வேலை தேடும் இளைஞர்கள் தங்கள் தேடுதலில் வெற்றி பெறுவார்கள். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கும் இந்த நேரம் சிறப்பானதாக இருக்கும். நிதி நிலைமையும் மிகவும் வலுவாக இருக்கும். பண வரவுகள் மகிழ்ச்சியைத் தரும். 

சிம்மம்- பண வரவு அதிகரிக்கும் என்பதால், கடன்களை அடைத்து நிம்மதியாக இருப்பீர்கள். வேலையிலும் எதிர்பார்த்த முன்னேற்றமும் வருவாயும் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும் என்பதால் வாங்கிய கடனை திருப்பச் செலுத்துவதற்கான வாய்ப்பு அதிகம்.

கன்னி - பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். கை வைத்த அனைத்து காரியமும் வெற்றி அடையும். எனினும், நிபுணர்கள் மற்றும் மூத்தவர்களின் ஆலோசனை பெற்று நடந்தால், ஆதாயம் பன்மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். 

துலாம்- சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். பணியிடத்தில் உங்கள் வேலையை மேலதிகாரி பாராட்டுவார். பலன் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

விருச்சிகம்- தேர்வு அல்லது போட்டிக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கடின உழைப்பை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். குறுக்குவழிகளை பின்பற்றுவது ஆபத்தானது. ஒரு புதிய வேலை தேட வேண்டிய அவசியம் இருந்தால், இந்த நேரம் பொருத்தமானது. விண்ணப்பிக்க முடியும்.

தனுசு- இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சோம்பலில் இருந்து விலகி இருக்க வேண்டும். இந்த நேரத்தில், ஆடம்பரம் மற்றும் கணிணி விளையாட்டுக்கள் போன்றவற்றில் சிக்கி நேரத்தை இழக்க நேரிடும் என்பதால் எச்சரிக்கை தேவை.

மகரம் - போட்டிக்குத் தயாராகும் மாணவர்களும், இளைஞர்களும் கடினமாக உழைக்கத் தயங்கக் கூடாது. சூரியனின் அருளால் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். அதனால் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்

கும்பம் - இளைஞர்கள் ஆராய்ச்சி தொடர்பான பணிகளைச் செய்து நல்ல பலன்களைப் பெறுவார்கள். திட்டப்பணியில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் நல்ல பலன்களைப் பெறலாம். சூரியனின் அருளால் விரைவில் பலன் கிடைக்கும். 

மீனம் - மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அரசு வேலைப் போட்டிக்குத் தயாராகி வருபவர்கள் பாடத் திருத்தத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். படித்த பாடத்தை மீண்டும் படிப்பதன் மூலம் மட்டுமே அவர்கள் அதிகபட்ச பலனைப் பெறுவார்கள். 

 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link