31 ஏக்கர் சுந்தர் பிச்சையின் பிரம்மாண்ட வீடு..! சொகுசு வசதிகள் கேட்டா மயக்கம் போட்டுருவீங்க
சென்னையை பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக உள்ளார். 2015 ஆம் ஆண்டு முதல் இந்த பொறுப்பில் இருக்கும் அவர், கூகுள் நிறுவனத்தில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.
இப்போது அவர், கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள லாஸ் ஆல்டோஸில் வசிக்கிறார். அங்கு 31.17 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட வீடு அவருக்கு இருக்கிறது.
சுந்தர் பிச்சை இந்த வீட்டை 40 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியதாக சொல்லப்படுகிறது. நடப்பு ஆண்டின் மதிப்புபடி, சுந்தர் பிச்சை வீட்டின் மதிப்பு 2,400 கோடி ரூபாய் ஆகும். 4,429 சதுர அடியில் பரந்து விரிந்து கிடக்கும் அவரது ஆடம்பரமான வீட்டில் 9 படுக்கை அறைகள், 5 குளியலறைகள், கணினி ஆய்வகம், தியேட்டர், சலூன், நீச்சல் குளம், கிரிக்கெட் மைதானம் போன்றவை உள்ளன.
இந்த வீட்டின் உட்புறத்தை சுந்தர் பிச்சையின் மனைவியே முழுமையாக வடிவமைத்துள்ளார். இதற்கான இன்டீரியர் டிசைனிங்கிற்காக மட்டும் 49 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இந்த ஆடம்பர வீட்டினுள் இன்பினிட்டி நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, ஒயின் பாதுகாப்பு அறை, சோலார் பேனல்கள், லிஃப்ட், பணியாளர்கள் தங்குமிடம் உள்ளிட்ட நவீன வசதிகளும் உள்ளன.
சுந்தர் பிச்சைக்கு கார் என்றால் கொள்ளை பிரியம். அதனால் அவரது கார் கலெக்ஷனில் Mercedes S650, Mercedes Benz V Class, BMW 730 LD, Range Rover, Porsche ஆகிய காஸ்ட்லியான சொகுசு கார்கள் இடம் பிடித்துள்ளன. சுந்தர் பிச்சை ஆண்டுக்கு ரூ.1,880 கோடி ஊதியமாக பெறுகிறார்.