ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து... இரத்த சோகையை நீக்கும் சூப்பர் உணவுகள்
இரத்த சோகை: உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால், பலவீனம், சோர்வு, சுவாசிப்பதில் சிரமம், உடல் நடுக்கம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இந்நிலையில், ஹீமோகுளோபினை அதிகரிக்க எந்தெந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
பேரீச்சம்பழம்: பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. இதில் ஃபோலிக் அமிலம் உள்ளது, இது இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது. எனவே, காலையில் எழுந்ததும் 7-8 பேரீச்சம் பழம் சாப்பிடவும்.
கீரை: பச்சை இலை காய்கறிகளில், இரும்பு சத்து மட்டுமல்லாது, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. கீரை சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது. தவிர, கீரையை உட்கொள்வது உடலில் இரத்தம் உருவாகும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
மாதுளை உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவும் சிறந்த பழம். இந்த பழத்தில் இரும்புச்சத்து மட்டுமின்றி, அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இது ஆற்றலை அள்ளிக் கொடுக்கக் கூடியது. இதை சாறு வடிவிலும் உட்கொள்ளலாம்.
ப்ரோக்கோலி: பூவைப் போல தோற்றமளிக்கும் பச்சை நிற ப்ரோக்கோலியில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
பீட்ரூட்: இரும்புச்சத்து நிறைந்த பீட்ரூட்டை உட்கொள்வதால் உடலில் இரத்தம் மற்றும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்த பீட்ரூட் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
இரும்புச்சத்து அதிகம் உள்ள வெல்லம் இயற்கையான இனிப்பு சுவை கொண்டது. வெல்லம். உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், ஆற்றலையும் அளிக்கின்றது. சர்க்கரைக்கு மாற்றாக இதனை உட்கொள்வது சிறந்தது.
பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.