மார்ச் 31க்குள் TVS iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினால் 40563 ரூபாய் டிஸ்கவுண்ட்!

Tue, 12 Mar 2024-5:12 pm,

TVS iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும்போது எக்ஸ்-ஷோரூம் விலையில் 42,000 வரை நேரடிப் பலன்கள் கிடைக்கும்

FAME-2 திட்டம் காலாவதியான பிறகு, ஏப்ரல் 1, 2024 முதல் நாட்டில் மின்சார வாகனங்களின் விலை அதிகரிக்கலாம் என்ற நிலையில்,  31 மார்ச் 2024க்கு முன்னதாக இந்த நிதியாண்டில் TVS iQube மின்சார வாகனத்தை வாங்கினால், 42 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும்

டீலர்களுக்காக நிறுவனம் வழங்கும் திட்டங்களின் கீழ் உங்களுக்கு சுமார் ரூ.6,000 கேஷ்பேக் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது 

‘நோ காஸ்ட் இஎம்ஐ’யைப் (No Cost EMI) பயன்படுத்தி TVS iQube ஐ வாங்கினால், சுமார் ரூ. 7,500 கூடுதல் பலன்களைப் பெறலாம்

மார்ச் 31ம் தேதிக்கு முன்னதாக டிவிஎஸ் நிறுவனத்தின் iQube மின்சார இருசக்கர வாகனம் வாங்கினால், உத்தரவாதத்திற்காக ரூ 5,000 செலுத்த வேண்டியதில்லை

மார்ச் மாதத்துடன் மத்திய அரசின் FAME-2 திட்டம் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக மின்சார ஸ்கூட்டர் வாங்குவதற்கு அரசு கொடுக்கும் மானியமான சுமார் 22,065 ரூபாய் மின்சார வாகனத்தின் விலையில் இருந்து கழித்துக் கொள்ளப்படும். இப்படி அனைத்து ஆஃபர்களையும் சேர்த்தால், ரூ.22,065 தள்ளுபடியுடன் ரூ.40,564 லாபம் பெறுகிறீர்கள். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,55,600.

நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டும் TVS iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதற்கு நிறுவனம் தள்ளுபடி வழங்குவதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link