ஐப்பசியில் அடைமழை பெய்தாலும் சூரிய பெயர்ச்சியால் சுகமாக வாழப்போகும் ராசிகள்! தீபாவளி மாத ராசிபலன்!
துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் ஆகும். இந்த மாதம் சூரியனின் தாக்கம் குறைந்திருக்கும், அடைமழை பெய்யும் என்பது வழக்கம்
வானிலையில் சூரியனின் தாக்கம் மந்தமாக இருந்தாலும், ஜோதிட சாஸ்திரப்படி, சூரியனின் தாக்கம் ஒருபோதும் குறைவதில்லை
தீபாவளி மாதத்தில் சூரியனின் அருளால் அருமையான வாழ்க்கையை வாழப்போகும் ராசிகள் இவை...
மீன ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகும் ஐப்பசி மாதத்தில், காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதிர்ஷ்டம் அற்புதமாக இருக்கும். சமூகத்தில் மரியாதையும் அந்தஸ்த்தும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். தைரியம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்
அந்தஸ்தும், கௌரவமும் கிடைக்கும் என்பதால், மகர ராசிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். நிதி ஆதாயம் உண்டாகும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி ராசிக்கு நல்ல காலத்தைக் கொடுக்கும் சூரியன், ஐப்பசியில் அவர்கள் குடும்பத்தில் சுப காரியங்களை நடத்திக் கொடுப்பார், சுபசெலவுகள் அதிகரிக்கும் என்பதால் கவலை வேண்டாம்
குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைத்து, தொழில்ரீதியில், இலக்குகளை துரிதமாக அடையும் வாய்ப்பு கடக ராசியினருக்குக் கிடைக்கும். மனதில் உள்ள குறைகள் நீங்கும். ஐப்பசி மாத சூரியப் பெயர்ச்சி மாற்றத்தை ஏற்படுத்தும்
ரிஷப ராசியினருக்கு மகத்தான வெற்றியை தரும் ஐப்பசியில் நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையும். பொருளாதார நிலை மேம்படும், வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாகும், போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது