சூரிய கிரகணம் 2024: பணவிரயம், நெருக்கடிகள்.. இந்த 5 ராசிகள் கொஞ்சம் கவனமாக இருங்கள்
சூரிய கிரகணம் வரும் ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி இந்திய நேரப்படி, இரவு 09 :12 மணிக்கு தொடங்கி, இரவு 11:47 மணிக்கு உச்சம் பெற்று, நள்ளிரவு 02:22 மணிக்கு நிறைவடையும். இந்திய நேரப்படி இரவு நேரத்தில் சூரிய கிரகணம் ஏற்படுவதால், இதனை இந்தியாவில் காண முடியாது.
மேஷ ராசிகளுக்கு இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் காரணமாக வேலையில் தொழில் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். உங்கள் முடிவு தவறாக போகும் வாய்ப்பு உள்ளது. முதலீடுகள் தொடர்பாக முக்கிய முடிவு எதையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம்.
கன்னி ராசிகளுக்கு சூரிய கிரகணம் காரணமாக நிதி நிலைமையில் பாதிப்பு ஏற்படலாம். பணவிரயம் காரணமாக மனதில் சஞ்சலம் நிலவும். குடும்பத்தினரின் உடல்நிலை பாதிக்கப்படுவதால், மருத்துவ செலவு அதிகமாகும். புதிதாக பொருள் ஏதும் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
விருச்சிக ராசிகளுக்கு சூரிய கிரகணம் மன அழுத்தம் பதற்றம் அதிகரிக்கலாம். உறவுகளில் பாதிப்பு ஏற்படலாம். பணத்திற்கு மீறிய செலவு இருப்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
தனுசு ராசியினருக்கு இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வாழ்க்கையில் சில சிக்கல்களை கொண்டு வரலாம். பண இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே எச்சரிக்கையாக இருக்கவும். முக்கிய முதலீடுகள் எதையும் செய்வதை தவிர்க்கவும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
கும்ப ராசியினருக்கு சூரிய கிரகணம் அசுப பலன்களை கொடுக்கும். வேலையில் தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவும். எதிர்பாராத முடிவுகள் ஏமாற்றத்தை கொடுக்கலாம். யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதை தவிர்க்கவும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.