யார் இந்த சுஷ்மிதா சென்? லலித் மோடி உடனான டேட்டிங் புகைப்படங்கள்

Thu, 14 Jul 2022-9:56 pm,

மாடலிங் துறையில் தன்னைவிட இளையவரான ரோஹ்மன் ஷால் என்பவருடன் டேட்டிங் செய்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரஸ்பரம் பிரிந்தனர்

இதனையடுத்து, ஐபிஎல் தொடரின் முன்னாள் சேர்மனாக இருந்த லலித் மோடியுடன் டேட்டிங் செய்தார். லண்டனில் இருவரும் வசித்து வருகின்றனர். மாலத்தீவு உள்ளிட்ட உலக சுற்றுலா முடிந்து தற்போது லண்டனில் இருக்கும் வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

ரகசியமாக இருந்த உறவை தற்போது பொதுவெளியில் வெளிப்படையாக இருவரும் அறிவித்துள்ளனர். சுஷ்மிதா சென்னை தன்னுடைய மனைவி எனக் கூறியுள்ளார் லலித் மோடி

இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், அதுவும் ஒருநாள் நடக்கும். விரைவில் உங்களுக்கு தெரிவிக்கிறோம் என லலித்மோடி கூறியிருக்கிறார்.

லலித் மோடிக்கு 56 வயதாகிறது. சுஷ்மிதா சென்னுக்கு 46 வயதாகிறது. இருவரும் தங்களின் டேட்டிங் வாழ்க்கையை இப்போது தொடங்கியுள்ளனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link