Flame of Victory கன்னியாகுமரிக்கு வந்தது; 1971 போர் வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்
1971 போர் வெற்றியின் பொன்விழா கொண்டாட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. தேசிய போர் நினைவுச்சின்னத்தில் (National War Memorial) அணையாமல் ஒளிரும் சுடரிலிருந்து நான்கு வெற்றி தீப்பிழம்புகள் ஏற்றப்பட்டன
நான்கு சுடர்களும் 1971 போர்வீரர்கள் மூலமாக நான்கு திசைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.
ஜூலை 11, ஞாயிற்றுக்கிழமை, திருநெல்வேலிக்கு அருகே அமைந்துள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை நிலையத்திற்கு (Naval Station INS Kattabomman) வந்து சேர்ந்தது.
வெற்றிச்சுடர் திருநெல்வேலி மாவட்டத்திற்கும், 1971 போரின் போது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த சிப்பாய் காசிமணி மற்றும் சங்கிலி செல்லையா ஆகியோரின் வீடுகளுக்கும் கொண்டு செல்லப்படும்.
ஜூலை 13 புதன்கிழமையன்று தூத்துக்குடி மாவட்டம் வழியாகச் செல்லும் சுடரை இந்திய கடலோர காவல்படையினர் பெற்றுக் கொள்வார்கள். அதைத் தொடர்ந்து மதுரை செல்லும் வழியில் ஐ.என்.எஸ் பருந்து-விடம் (INS Parundu) ஒப்படைக்கப்படும்.