T20 World Cup 2022: இந்த உலகக்கோப்பையில் மட்டையடிக்கும் பழம்பெரும் கிரிக்கெட்டர்கள்

Mon, 10 Oct 2022-2:10 pm,

ஐபிஎல் 2022 இல் RCB க்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக், இந்திய அணியில் இடம் பிடித்தார். அப்போதிருந்து, அவர் இந்திய அணியின் மிகப்பெரிய ஃபினிஷராக உருவெடுத்தார். இந்திய அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக்குக்கு தற்போது  37 வயது 130 நாட்கள் ஆகும்.

ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், எந்த பந்துவீச்சு தாக்குதலையும் எதிர் கொள்ளக்கூடியவர். அவருக்கு வயது 35 வயது 347 நாட்கள்.  

பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் தனது அணியில் அதிக வயதான வீரர் ஆவார். அவருக்கு வயது 35 வயது 199 நாட்கள். ஷாகிப் அல் ஹசன் 102 சர்வதேச போட்டிகளில் விளையாடி 2061 ரன்கள் மற்றும் 122 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

நியூசிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர்களான மார்ட்டின் கப்டில், போட்டியின் போக்கை ஒரு சில பந்துகளில் மாற்றி டி20 வடிவத்தில் விறுவிறுப்பாக பேட்டிங் செய்வதில் பிரபலமானவர். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது, அது அணிக்கு பயனுள்ளதாக இருக்கும். அவருக்கு இப்போது 36 வயது 9 நாட்கள் ஆகிறது.  

ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபியின் வயது 37 ஆண்டுகள் 281 நாட்கள் ஆகும். 2022 டி20 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்ற எட்டு வீரர்களில் மிக வயதான வீரர் முகமது நபி ஆப்கானிஸ்தான் அணிக்காக 101 டி20 போட்டிகளில் விளையாடி, மொத்தம் 1669 ரன்கள் எடுத்துள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link