தை அமாவாசை 2025: வீட்டு வாசலில் காகம் வந்தால் என்ன அர்த்தம்..காகம் கத்தினால் என்ன அறிகுறிகள்!
)
பித்ரு தர்ப்பணம் கொடுக்கமுடியாதவர்கள் இந்த முக்கியமான மூன்று அமாவாசை நாட்களில் விரதம் இருந்து புத்ருக்களை வழிப்பாட்டு செய்து வந்தாலே நல்ல பலன் மற்றும் நன்மை கிடைக்கும் என்று கூறப்படுகிறது
)
அமாவாசை நாட்களில் பொதுவாக எல்லா வீட்டிலும் சமையல் செய்து அனைவரும் சாப்பிடும் முன் படையலை காகத்திற்கு வைப்பர். அதன்பின்னரே விரதத்தை முடிப்பார்கள். ஆனால் இந்த தை அமாவாசை அன்று மட்டும் காகத்திற்கு உணவு அளிப்பது என்பது மிகவும் முக்கியமானது என்று கூறப்படுகிறது.
)
வீட்டின் வாசலில் காகம் வந்தாலோ அல்லது கத்தினாலோ இந்த செயல்பாடு ஒரு கலவையான விளைவுகளை ஏற்படுத்த நேரிடும் என்று சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.எங்கேயாவது வெளியில் பயணம் செல்லும்போது காகம் உரத்த அலறல் அல்லது கத்தல் செயல்பாடுகளின் அறிகுறிகள் நல்ல வெற்றிக்கான அர்த்தம் என்று கூறப்படுகிறது. மேலும் இது வாழ்க்கையில் பல்வேறு வெற்றிகளையும் கொடுக்கும்.
நீங்கள் வெளியில் வேலை விஷயமாகவோ அல்லது சுப காரியங்களுக்குச் செல்லும்போதோ உங்கள் வீட்டில் மேற்கு நோக்கி காகம் பறந்தால் நல்ல நன்மைகள் அன்று கிடைக்கும் என்று அர்த்தம். காகம் வடக்கு அல்லது கிழக்கு நோக்கிப் பறந்தால் அதன் அறிகுறிகள் உங்கள் வீட்டிற்கு விருந்தினர் அல்லது நண்பர்கள் வருவதற்கான அர்த்தம் என்று சொல்லப்படுகிறது.
வீட்டு வாசலில் காகம் கூட்டங்கள் ஒன்றுகூடிக் கத்தினாலோ அல்லது சுற்றினாலோ உங்கள் குடும்பத்திற்கு சில நெருக்கடி அல்லது ஆபத்து வரப்போகிறது என்று அர்த்தம். மேலும் உங்களைக் கவனம் எச்சரிக்கை விடும் அறிகுறியாகக்கூட இருக்கலாம்.
வீட்டின் தெற்கு பகுதியில் காகம் அமர்ந்தால் அதன் அறிகுறிகள் எதிர்மறையானதாக இருக்கலாம். முன்னோர்கள் உங்கள் மீது கோபப்படுவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
கோடை வெயிலில் மற்றும் எல்லா நேரங்களிலும் நீங்கள் பறவைகளுக்கு நீர் வைப்பதால் உங்களுக்கு நல்லது நடக்கும். உங்கள் வீட்டின் தண்ணீரை காகம் குடித்தால் நீங்கள் விரைவில் பணக்காரராக மாறவும் அதிகம் வாய்ப்பு உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.
உங்கள் வீட்டில் காகங்கள் அடிக்கடி சந்தித்தால் இல்லத்தில் சுப காரியங்கள் அல்லது நிகழ்வுகள் நடக்கும் அறிகுறியாகும். மேலும் இந்த அர்த்தம் திருமணம் நடக்கும் அறிகுறியாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.