நோய்கள் அண்டாமல் இருக்க... சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சாப்பிடுங்க...!
வெல்லம் சர்க்கரையைப் போல சுத்திகரிக்கப்படுவதில்லை.பல சத்துக்கள் இதில் இருப்பதற்கு இதுவே காரணம். புரதம், கால்சியம், வைட்டமின் பி12, இரும்புச்சத்து என பல வகையான சத்துக்கள் வெல்லத்தில் உள்ளது. இதில் கொழுப்பு இல்லை. எனவே, உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சர்க்கரையில் கலோரிகள் மட்டுமே உள்ளன.
வெல்லம் வயிற்றுப் பிரச்சனைகளை தீர்க்கும் மிகவும் எளிதான மற்றும் பயனுள்ள தீர்வாகும். வயிற்றில் வாயு உருவாவதையும், செரிமானம் தொடர்பான பிற பிரச்சனைகளையும் தீர்க்கும் ஆற்றல் கொண்டது. உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது.
வெல்லம் நுரையீரலை உள்ளே இருந்து சுத்தம் செய்யக்கூடிய ஆற்றல் கொண்டது என உணவியல் நிபுணர் கூறுகின்றனர். நுரையீரலில் சிக்கிக்கொள்ளக்கூடிய கார்பன் துகள்களையும், நிகோடினையும் அகற்றும் திறன் இதற்கு உள்ளது. எனவே, நுரையீரலில் சேரும் மாசுகளை வெளியேற்றுகிறது.
வெல்லம் சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் சிறிதளவு வெல்லம் சாப்பிட்டு வந்தால் முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படுவதோடு, சருமம் பளபளக்கும். உங்கள் சரும பிரச்சனைகளை உடலின் உள்ளிருந்து குணப்படுத்த வெல்லம் உதவுகிறது.
வெல்லத்தில் உள்ள பொட்டாசியம் இதயம் தொடர்பான நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. சர்க்கரை இதய நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும், எனவே வெல்லம் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
மலச்சிக்கல் பிரச்சனையால் நீங்கள் சிரமப்பட்டால், இரவு உணவுக்கு பின் ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
மூட்டு வலி ஏற்பட்டால், வெல்லத்துடன் இஞ்சியைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் ஒரு துண்டு வெல்லத்துடன் இஞ்சி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.