முதல் படத்தின் ரிலீசுக்கு முன்பே கவனம் ஈர்த்த தமிழ் திரைப்பட நடிகர்கள்!
)
மிகப்பெரிய தொழிலதிபரான லெஜெண்ட் சரவணன் சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தி லெஜெண்ட்' படம் ஐந்து மொழிகளில், 2500 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே பலரிடமும் இப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
)
நடிகர் சிவகுமாரின் மகனும், சூர்யாவின் தம்பியுமான நடிகர் கார்த்தி முதன்முதலில் நடித்த 'பருத்திவீரன்' படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இவர்கள் குடும்பத்திலிருந்து வந்த மூன்றாவது நடிகர் கார்த்தி, படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டதோடு படம் பெரியளவில் வெற்றியடைந்தது.
)
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு முதன்முதலில் நடித்த படம் 'கும்கி'. பிரபு சாலமன் இப்படத்தை இயக்கினார், படம் வெளியாவதற்கு முன்னரே அதிக எதிர்பார்ப்பு பெருகியது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை வகையில் விக்ரம் பிரபுவும் சிறப்பாக நடித்திருந்தார்.
கேப்டன் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் முதலில் நடித்த படம் 'சகாப்தம்'. பல நடிகர்களை அறிமுகப்படுத்திய விஜயகாந்த அவரின் வாரிசை திரைத்துறையில் ப்ரம்மாண்டமாக அறிமுகப்படுத்தினார். இப்படத்தின் ப்ரோமோஷன் பெரும்பான்மையான கவனத்தை ஈர்த்தது.