Valentines Day 2024: ‘காதல் கண்கட்டுதே..’ காதலித்து திருமணம் செய்து கொண்ட திரை பிரபலங்கள்!

Wed, 14 Feb 2024-2:10 pm,

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காதல் திருமணம் செய்து கொண்ட செலிப்ரிட்டி ஜோடிக்கள் யார் யார் என இங்கு பார்ப்போமா? 

பாக்கியராஜ்ஜின் மகன் சாந்தனுவும், தொகுப்பாளினி கீர்த்தியும் 2015ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து கொண்ட இவர்கள் ஒன்றாக ஒரு ஆல்பம் பாடலிலும் இணைந்து நடித்திருக்கின்றனர். அப்போதுதான் இவர்களுக்குள் காதல் பற்றிகொண்டது. 

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நாயகி, குஷ்பு. இவரும் நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சியும் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். முறை மாமன் படத்தில் குஷ்பூ ஹீரியோனாக நடித்திருப்பார். அப்படி நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அப்படத்தில் உதவி இயக்குநராக இருந்த சுந்தருக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. 

தற்போது தமிழ் திரையுலகின் டாப் இயக்குநர்களுள் ஒருவராக உள்ளார், அட்லீ. இவர், சினிமா உலகில் துணை நடிகையாக இருந்த பிரியாவை பல வருடங்களாக காதலித்தார். தனது முதல் படமான ராஜா ராணி ரிலீஸ் ஆன உடனே 2014ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

90ஸ் குழந்தைகளுக்கு பிடித்த கதாநாயகியாக இருந்தவர், சினேகா. இவரும் பிரசன்னாவும் 2012ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தமிழ் மக்களுக்கு பிடித்த ஜோடிகளுள் இவரும் ஒருவர். 

‘மரகத நாணயம்’ படத்தில் நிக்கி கல்ராணியும் ஆதியும் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிக்கும் போது காதலித்து டேட்டிங் செய்து கொண்டிருந்த இவர்கள், தொடர்ந்து சில படங்களில் ஜோடியாக நடித்தனர். இவர்களுக்கு, 2022ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. 

அஜித்-ஷாலினி அமர்களம் படத்தில் ஒன்றாக நடித்தனர். ஷாலினியிடம் காதலில் விழுந்த அஜித், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் காலம் தாமதிக்காமல் ப்ரப்போஸ் செய்து விட்டார். இவர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி 2000ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. 

ரசிகர்களுக்கு பிடித்த ஜோடிகளுள் டாப் இடத்தில் இருப்பவர்கள், சூர்யா-ஜோதிகா. முதன் முதலாக இருவரும் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் ஒன்றாக நடித்தனர். அதன் பிறகு, காக்க காக்க, மாயாவி, பேரழகன், ஜூன் ஆர், உயிரிலே கலந்து, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக நடித்தனர். இவர்களுக்கு 2006ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link