தயாரித்த முதல் படத்திலேயே Flop கொடுத்த இயக்குநர்கள்!! யார் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் இயக்குநர்களாக இருப்பவர்கள், லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் மற்றும் அட்லீ. இவர்களின் படங்கள் தோல்வியடைவில்லை என்றாலும், அவர்கள் தயாரித்திருந்த படங்கள் வெற்றியடையவில்லை. அவர்கள் யார் யார் என்று பார்த்துவிடுவோமா?
விஜய்யை வைத்து, 3 படங்களை இயக்கிய அட்லீ, முதன் முறையாக ஒரு படத்தை தயாரித்தார். அந்த படம், பெரிதளவில் தோல்வி அடையவில்லை என்றாலும் பெரிதாக வெற்றியும் அடைவில்லை.
ஜீவா நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படம்தான் அது. அந்த படம், ஓரளவு சுமாரான விமர்சனத்தையும் வசூலையும் மட்டுமே சந்தித்தது.
தமிழ் திரையுலகில், லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற புது விஷயத்தை கொடுத்து, ட்ரெண்டிங்கில் இருப்பவர், லோகி.
லோகி இயக்கத்தில் முதன் முறையாக வெளியான படம், ஃபைட் க்ளப். இந்த படம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இதில், விஜய் குமார் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம், விமர்சனத்திலும் வசூலிலும் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.
டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என வெற்றிப்படங்களை கொடுத்த நெல்சன், சமீபத்தில் ஒரு படத்தை தயாரித்தார். இதனால், அவரது கெஜானாவே காலியாகிவிட்டதாக கூறப்படுகிறது.
புதுமுக இயக்குநர் சிவபாலன் இயக்கிய படம் ப்ளடி பெக்கர். இந்த படத்தில், ஹீரோவாக கவின் நடித்திருந்தார். தீபாவளி ரிலீஸாக அமரன் மற்றும் பிரதர் படத்துடன் வெளியான இப்படம், பெரிதாக வசூலை பெறவில்லை எனக்கூறப்படுகிறது.