செல்போன் வச்சிருக்கீங்களா? தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை முக்கிய எச்சரிக்கை

Sun, 01 Dec 2024-2:03 pm,

இப்போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு சைபர் கிரைம் (Tamil Nadu Cyber Crime) கொடுத்திருக்கும் முக்கிய எச்சரிக்கையில் ஆன்லைன் மோசடிகள் குறித்து மிக கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 

ஏதேனும் மோசடிகள் குறித்து புகார்கள் அளிக்க வேண்டும் என்றால் 1930 என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மிக முக்கியமாக டெலிகிராம் (Telegram) செயலியில் எந்த குரூப்பிலும் இணைய வேண்டாம் என தெரிவித்துள்ளது. டெலிகிராம் குரூப் மூலம் அதிக மோசடிகள் நடப்பதாகவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

தெரியாத டெலிகிராம் சேனல்களில் இணைய வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை, டெலிகிராம் சேனல்களில் வரும் உறுதிப்படுத்தப்படாத லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

ஏனென்றால் இந்த லிங்குகள் மூலம் உங்கள் செல்போன் ஹேக் செய்யும் ஹேக்கர்களால் முடியும். அதேபோல் .APK Files என்ற பார்மேட்டில் அனுப்பப்படும் பைல்களை டவுன்லோடு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த பைல்கள் டெலிகிராம் மட்டுமல்லாமல் வாட்ஸ்அப் உள்ளிட்ட எந்த சோஷியல் மீடியா வழியாக அனுப்பப்பட்டாலும் அந்த பைல்களையும் லிங்குகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என தமிழ்நாடு சைபர் கிரைம் விங் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. 

 

அதேபோல் உறுதிபடுத்தப்படாத வங்கிக் கணக்குகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் டெபாசிட் அல்லது டிரான்ஸ்பர் செய்ய வேண்டாம் என்றும் தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. 

உங்கள் மொபைல் எண்ணை பிளாக் செய்வதாக கூறி ஏதேனும் அழைப்புகள் வந்தாலும் அதனை 1930 என்ற மொபைல் எண்ணுக்கு அழைத்து ரிப்போர்ட் செய்ய வேண்டும். உங்கள் மொபைல் எண் மற்றும் இணைப்பு குறித்த தகவல் www.sancharsaathi.gov.in பக்கத்தில் இருக்கும் என்பதால், இதில் சென்று உண்மை தன்மையை சரிபார்த்துக் கொள்ளலாம். 

மேலும், சோஷியல் மீடியாக்களில் உங்களின் பிரைவசியை உறுதிபடுத்திக் கொள்வதில் எப்போதும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை கேட்டுக் கொண்டிருக்கிறது. எந்த சோஷியல் மீடியா தளமாக இருந்தாலும் அதில் சென்று உங்கள் புகைப்படம், போஸ்டுகளை யார் பார்க்க வேண்டும் யார் பார்க்கக்கூடாது என்பதை லிமிட் செய்து கொள்ளலாம். 

எனவே, தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையினர் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி உங்களை மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்ளுங்கள். இதுபோல் மற்றவர்களும் பாதிக்கப்படாமல் இருக்க இந்த தகவலை அவர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link