ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் உயர்த்திய தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும் இந்த பணம்?

Wed, 13 Nov 2024-8:47 am,

நெற்குன்றம் வீட்டு வசதி வாரிய திட்டத்திற்காக அரசு ஊழியர்கள், ஐஏஎஸ் உட்பட அகில இந்திய பணி அலுவலர்களுக்கு வீடு வாங்க வழங்கப்படும் முன்பணத்தில் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. அதுக்குறித்து பார்ப்போம்.

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் ஐஏஎஸ் உட்பட அகில இந்திய பணி அலுவலர்கள் சொந்த வீடு வாங்கவோ அல்லது கட்டுவதற்கான செலவில் குறிப்பிட்ட தொகையை அரசு முன்பணமாக வழங்குகிறது. 

வங்கியில் கடன் வாங்குவதற்கு பதிலாக அரசிடம் முன்பணமாக இந்த தொகையை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். அரசிடம் முன்பணமாக பெறும் சம்பந்தப்பட்ட பணியாளர்களின் மாத ஊதியத்தில் இந்த தொகை தவணை முறையில் பிடித்தம் செய்யப்படும். 

தற்போது அரசு ஊழியர்களுக்காக வீடு கட்டுவதற்கு முன்பணம் 50 லட்சம் ரூபாயாகவும், அகில இந்திய பணி அலுவலர்களுக்கு 75 லட்சம் ரூபாயாக வழங்கப்படுகிறது. இதில் அரசு ஊழியர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், அகில இந்திய பணி அலுவலர்களுக்கு 20 லட்சம் ரூபாயும் கூடுதல் முன்பணமாக வழங்கும் வழிவகை உள்ளது. 

இந்த நிலையில், வீட்டு வசதி வாரியத்தின் நெற்குன்றம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு வாங்க அரசு ஊழியர்கள் மற்றும் அகில இந்திய பணி அலுவலர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்திட்டத்தில் வீடுகளின் விலை மற்றும் ஜிஎஸ்டி வகையில் கூடுதல் தொகையை செலுத்த வீட்டு வசதி வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

பணவீக்கம் காரணமாக செலவுகள் உயர்ந்த நிலையில், அதனை சமாளிக்க அரசு ஊழியர்கள் மற்றும் அகில இந்திய பணி அலுவலர்களுக்கு கூடுதல் தொகை தேவைப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு வீடு கட்ட முன்பணத்தை பெற்றுவிட்டனர். எனவே இவர்களுக்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் முன்பணமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்த கோரிகக்கி சம்பந்தமாக தமிழக மின் பகிர்மான கழகத்தின் இணை நிர்வாக இயக்குனர் விசு மகாஜன் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். அதனை ஏற்று கூடுதல் பணம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

நெற்குன்றம் திட்டத்திற்காக அரசு ஊழியர்களுக்காக கூடுதல் முன்பணத்தை 10 லட்சத்திலிருந்து 15 லட்சம் ரூபாயாகவும், அகில இந்திய பணி அலுவலர்களுக்கான கூடுதல் முன்பணத்தை 20 லட்சத்திலிருந்து 25 லட்ச ரூபாயாவும் உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கான அரசாணை வீட்டு வசதி மற்றும் நகர் புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா பிறப்பித்து உள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link