TNPSCயில் typist வேலை அறிவிப்பு! அரசாங்கத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு!
தட்டச்சர் பணியில் சிறப்பாகச் செயல்படுபவராக இருந்தால் இந்த அரிய வாய்ப்பை நீங்கள் நிச்சயம் பயன்படுத்தலாம். தமிழ்நாடு அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பலருக்கும் வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது. இத்தகைய நேரத்தில் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் திறமையைக் காட்டும் வெற்றிப் பாதையைத் தமிழ்நாடு அரசு பெற்றுத்தருகிறது. இதற்கான கல்வித் தகுதி, காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தட்டச்சர் பணிக்கானத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் நாள் மற்றும் கடைசி நாள் அனைத்தும் விவரமாகக் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. தட்டச்சர் அரசு வேலையில் 50 காலியிடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பிக்கும் ஆரம்ப நாள் 25.11.2024 மற்றும் கடைசி நாள் 24.12.2024. பணியின் பெயர்: Typist (தட்டச்சர்) கல்வித் தகுதி: கட்டாயம் 10 வகுப்பில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். தட்டச்சு எழுத்தில் அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர் அல்லது மூத்த நிலை (அல்லது) தமிழில் உயர் அல்லது மூத்த நிலை மற்றும் ஆங்கிலத்தில் கீழ்/ஜூனியர் நிலை (அல்லது) ஆங்கிலத்தில் உயர் அல்லது மூத்த நிலை மற்றும் தமிழில் கீழ்/ஜூனியர் நிலை இதில் ஏதேனும் ஒன்றில் சிறப்பாகச் செயல்பட்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு டி. டி. இ. ஆல் நடத்தப்படும் அலுவலக ஆட்டோமேஷனில் கணினியில் சான்றிதழ் படிப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் குறிப்பு: கணினி அறிவியல் (அல்லது) கணினி பொறியியல் (அல்லது) கணினி பயன்பாடு (அல்லது) தகவல் தொழில்நுட்பம் (அல்லது) மென்பொருள் பொறியியல் (அல்லது) கம்ப்யூட்டிங் (அல்லது) கணினி தகவல் அமைப்பு (அல்லது) கணினி வடிவமைப்பு பல்கலைக்கழக மானியக் குழு/அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்/தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (அல்லது) அதற்குச் சமமான அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கணினி அறிவியல் பட்டப்படிப்பு (அல்லது) அலுவலக ஆட்டோமேஷனில் கணினி சான்றிதழ் படிப்பைப் பெறத் தேவையில்லை.
அரசு DTE ஆல் நடத்தப்படும் அலுவலக ஆட்டோமேஷனில் கணினியில் சான்றிதழ் படிப்பு இல்லாத விண்ணப்பதாரர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்கள் தகுதிகாண் காலத்திற்குள் அல்லது பதவிக்கு நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் அத்தகைய கல்வித் தகுதியைப் பெற வேண்டும். வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
இந்த பணிக்கான விண்ணப்ப கட்டணம்: ஒரு முறை பதிவு கட்டணம்-Rs.150/,தேர்வுக் கட்டணம்-ரூ. 100/. கட்டணத்திற்கான சிறப்பு சலுகைகள் முன்னாள் படைவீரர்கள்-இரண்டு இலவச வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் இதில் ஏதேனும் BCM, BC, MBC/DC நீங்கள் இருந்தால் இதற்கான கட்டண சலுகைகள் மற்றும் இலவச வாய்ப்புகள் உள்ளன. பெஞ்ச்மார்க் ஊனமுற்றவர்கள், SC, SC(A) மற்றும் ST, ஆதரவற்ற விதவைத்தாரர்களுக்கு முழு விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யும் முறை: Part A: Tamil Eligibility Test, Part B: General Studies and Aptitude and Mental Ability Test மற்றும் Certificate Verification. தேர்வுக்கான முக்கிய தேதி: 08.02.2025, 9.30 A.M to 12.30 P.M. மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறோம் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.11.2024 மற்றும் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 24.12.2024
விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ== இதில் விண்ணபிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். இந்த தகவல் அனைத்தும் தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. https://tnpsc.gov.in/Document/tamil/SCE%20Tamil%20Final_.pdf