Tamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!

Tue, 04 Jun 2024-2:27 pm,

தமிழகத்தில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. மேலும் புதுச்சேரியிலும் காங்கிரஸ் வேட்பாளர் கிட்டத்தட்ட வெற்றி பெரும் தருவாயில் இருக்கிறார்.

 

ஒருசில இடங்களில் பாஜக இரண்டாம் இடத்தையும், அதிமுக இரண்டாம் இடத்தையும் பெற்று வருகிறது. ஆனாலும் இறுதி முடிவுகள் எங்கும் அறிவிக்கப்படவில்லை.

 

இந்நிலையில், கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்தியாராணி மக்களவை தேர்தலில் போட்டியிட்டார்.

 

தற்போது முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், வித்தியாராணி 21+ ஆயிரம் வாக்குகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார்.

 

முதல் இடத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபிநாத் 1 லட்சம் வாக்குகளுடன் முன்னணியில் உள்ளார். அவரை தொடர்ந்து பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் உள்ளன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link