தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடா? ஆம் என்கிறார்கள் மக்கள், இல்லை என்கிறது அரசு

Mon, 19 Apr 2021-9:07 pm,

கோயம்புத்தூரில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 727 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 7,850 ஆக இருந்தது. அது ஞாயிற்றுக்கிழமை 918 ஆகக் குறைந்தது. கோயம்புத்தூர் கார்ப்பரேஷன் அதிகாரிகள் 9,550 கோவிட் தடுப்பூசி டோஸ்கள் இருப்பதாகக் கூறினாலும், தடுப்பூசிகள் குறைவாகவே இருப்பதாக மக்கள் புகார் கூறினர்.

அவினாஷி, உடுமலைப்பேட்டை மற்றும் பல்லடத்தில், தடுப்பூசிகள் இல்லாததால், மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது. திருப்பூரின் சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார், ஓரிரு நாட்களில் போதுமான அளவு தடுப்பூசிகள் கிடைத்து விடும் என்றும், அதன் பிறகு பிரச்சினை தீர்ந்து விடும் என்றும் தெரிவித்தார்.

மதுரை மற்றும் நாகப்பட்டினத்தில், தடுப்பூசிகளின் பற்றாக்குறையைத் தொடர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டன. திருச்சி மாவட்டத்தில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு தடுப்பூசி முகாம்களுக்கு மாநில சுகாதாரத் துறை 2,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளை ஒதுக்கியது. இருப்பினும், தடுப்பூசிகளைப் பொறுத்தவரை தட்டுப்பாடு அதிகமாக இருந்த மாவட்டங்களில் மதுரை முன்னிலையில் உள்ளது.

 

சென்னையில் சில  தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தவர்களை திருப்பி அனுப்பியதாகவும் குற்றச்சாட்டுகள் வந்தன. அவர்கள் CoWIN செயலியில் பதிவு செய்திருந்த நிலையிலும் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தடுப்பூசிகள் போதுமான எண்ணிக்கையில் கிடைக்கின்றன என்று மாநில சுகாதார அதிகாரிகளும், நிறுவன அதிகாரிகளும் தொடர்ந்து கூறி வருகின்றனர். சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாஷ், சென்னையில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இல்லை என்றும், தடுப்பூசிகளை வீணடிக்காமல் இருக்க, 10 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள்ள நிலையில்தான் ஒரு தடுப்பூசி குப்பி திறக்கப்படுகிறது என்றும் கூறினார். ஒரு குப்பியைத் திறந்தால், அதை மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்குள் பயன்படுத்தி விட வேண்டும், அல்லது அது வீணாகிவிடும்.

தமிழக சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அரசிடம் இருப்பில் போதுமான அளவு தடுப்பூசிகள் உள்ளன என்றும், தமிழகத்தின் சில மாவட்டங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆராயப்படுகின்றன என்றும் கூறினார். இருப்பினும், தடுப்பூசிகளைப் பொறுத்தவரை பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று தான் உறுதியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link