TN PWD Recruitment 2024:பொதுப்பணித்துறையில் அரசாங்கத்துடன் பணிபுரிய அரிய வாய்ப்பு!

Thu, 12 Dec 2024-6:26 pm,

தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் 760 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த வாய்ப்பு உங்கள் வாழ்க்கையை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லலாம். 

tN PWD ஆட்சேர்ப்பில் பட்டதாரி, தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் பொறியியல் அல்லாத பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் ஆட்கள் தேவைப்படுகின்றன. விண்ணப்பத்திற்கான கடைசித் தேதி 31 டிசம்பர் வரை, அறிய வாய்ப்பை பயன்படுத்தத் தவறாதீர்கள். 

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் டெக்னீஷியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ், யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். உங்கள் படிப்பிற்கேற்ற வேலை உங்களுக்குக் கிடைக்கும் இதற்கான காலியிடங்கள் 500 உள்ளன. 

இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைகள் 160 காலியிடங்கள் உள்ளன. பொறியியல் அல்லாத பட்டதாரிகளுக்கு 100 காலியிடங்கள் உள்ளன. கலை, அறிவியல், வணிகம் மற்றும் மனிதநேயப் பிரிவு இதில் ஏதேனும் ஒருதுறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி பயிற்சி 460 காலியிடங்களும் மின்சாரம் மற்றும் மின்னணுவியல் 28 காலியிடங்களும் மற்றும் கட்டிடக்கலை 12 காலியிடங்களும் உள்ளன. 

டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்களுக்கு 150 காலியிடங்கள், மின்சாரம் மற்றும் மின்னணுவியல் 5 மற்றும் கட்டிடக்கலை 5 காலியிடங்கள் உள்ளன. 

பொறியியல் அல்லாத பட்டதாரிகள் அதாவது கலை, அறிவியல், வணிகம், மனிதநேயம் போன்றவற்றில் 100 காலியிடங்கள் உள்ளன. இதனை நிரப்ப நீங்கள் தகுதியுள்ளவர்களாக இருந்தால் நிச்சயம் பின்வரும் விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பம் செய்யலாம். 

மேலேக் கொடுக்கப்பட்ட பணிகளுக்கு தேவையானக் கல்வித் தகுதி பட்டதாரி பயிற்சி (பொறியியல்/தொழில்நுட்பம்), அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முழுநேர பொறியியல் அல்லது தொழில்நுட்ப பட்டம் பெற்றிருத்தல், மத்திய அல்லது மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://tamilnadurecruitment.in/organization/tn-pwd/

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link