எடையை குறைக்க வேண்டுமா; ‘இந்த’ சுவையான சாலடுகளை டயட்டில் சேர்க்கவும்!
கிளாசிக் கிரேக்க சாலட் முக்கியமாக தக்காளி, வெள்ளரிகள், வெங்காயம், ஆலிவ்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. குடைமிளகாயைச் சேர்ப்பது கிரேக்க சாலட்டின் சுவையை அதிகரிக்கும். கிரேக்கத்திற்கு வெளியே உள்ள நாடுகளில், கீரையும் இந்த சாலட்களில் சேர்க்கப்படுகிறது. இந்த எளிய சாலட் மிகவும் ஆரோக்கியமானது மற்றும் சுவையானது. இதனுடன் ப்ரோக்கோலியையும் சேர்க்கலாம். உப்பு, ஓரிகேனோ சேர்த்தால் சுவையான சாலட் ரெடி.
பழத்துடன் பாஸ்தா சாலட் சாப்பிடுவதும் நல்லது. இருப்பினும், இதற்கு நீங்கள் பதப்படுத்தப்படாத கோதுமை பாஸ்தாவைப் பயன்படுத்த வேண்டும். பாஸ்தா சாலட் சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த சிற்றுண்டி. இதைத் தயாரிக்க, முதலில் பாஸ்தாவை வேகவைத்து, அது ஆறிய பிறகு, மாம்பழம், திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் கிவி போன்ற பழங்களைச் சேர்க்கவும். சுவைக்கு ஏற்பமசாலாப் பொருட்களைச் சேர்த்து பயன்படுத்தலாம்.
ஸ்ப்ரவுட்ஸ் எனப்படும் முளை கட்டிய தானியங்கள் சாலட்டை பெரும்பாலான வீடுகளில் செய்யலாம். ஏனெனில் இது மிகவும் ஆரோக்கியமானது. தயாரிக்க மிகவும் எளிதானது. இதை செய்ய, ஊற வைத்த பருப்பு மற்றும் தானியங்களை, முந்தய இரவே ஈரத்துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில் அது முளைக்கும். இப்போது அவற்றை எடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் தேவைஅயான மசாலாவை சேர்க்கவும். எலுமிச்சம்பழம் சேர்த்தால் அதிக சுவை கிடைக்கும்.
சீஸி வெஜிடபிள் சாலட்டில் புரதம் அதிகம். இதைத் தயாரிக்க, சீஸ், தக்காளி, வெங்காயம், வெள்ளரி, கேப்சிகம், கீரை போன்ற காய்கறிகள் தேவை. பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கி சாலட்டில் கலக்கவும். உப்பு மற்றும் மிளகுத்தூள், எலுமிச்சம்பழம் சேர்த்தால் அதிக சுவை கிடைக்கும்.
பச்சை காய்கறிகளை மட்டுமே கிரீன் சாலட்டில் சேர்க்க வேண்டும். உதாரணமாக, வெள்ளரிக்காய், குடைமிளகாய், கீரை, பச்சை பட்டாணி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர் மற்றும் ப்ரோக்கோலி போன்ற அனைத்து காய்கறிகளையும் சேர்த்து, உப்பு, மிளகு மற்றும் எலுமிச்சை சேர்க்கவும்.