உங்கள் ஸ்மார்போனை சைபர் மோசடியில் இருந்து பாதுகாக்க... சில முக்கிய டிப்ஸ்

Mon, 16 Sep 2024-10:25 am,

ஸ்மார்ட்போன் என்பது தகவல் தொடர்பு சாதனமாக இருந்த நிலை மாறி, பண வரிவத்தனைக்கான முக்கிய சாதனமாகவும், முக்கியமான தரவுகளைக் கொண்ட பொக்கிஷமாகும் ஆகி விட்டது. இதில் நமது புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் வங்கி விவரங்கள் என அனைத்தும் உள்ளன. 

சைபர் மோசடி: ஸ்மார்ட்போன்  ஹேக் செய்யப்பட்டால், பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும். ஹேக்கர்கள் போன் மூலம் தனிப்பட்ட தரவை அணுகுவதன் மூலம் சைபர் மோசடி செய்யலாம். நிமிடத்தில் வங்கி கணக்கி இருந்து பணம் காலியாகலாம். எனவே மிகுந்த எச்சரிக்கை அவசியம்.

உங்கள் ஸ்மார்ட்போனில் சில செட்டிங்ஸ் வசதியை பயன்படுத்துவதன் மூலமும், சில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலமும், சைபர் தாக்குதல்களைத் தவிர்க்கலாம். தொலைபேசியின் பாதுகாப்பை அதிகரிக்கக்கூடிய அந்த அம்சங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்தல்: உங்கள் ஸ்மார்ட்போனில் எப்போதும் சமீபத்திய ஆபரேடிங் சிஸ்டம் என்னும் இயக்க முறைமையை (Android அல்லது iOS போன்றவை) பயன்படுத்தவும். அட்டேட் செய்யப்பட்ட ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உங்கள் ஸ்மார்ட்போனை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு புதுப்பிப்புகளும் அடங்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வலுவான பாஸ்வேர்டை பயன்படுத்தவும்: உங்கள் ஃபோன், ஆப்ஸ் மற்றும் மின்னஞ்சலுக்கு வலுவான கடவுச்சொற்களை உருவாக்கவும். நீங்கள் உருவாக்கும் பாஸ்வேர்டில் எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு செயலிக்கும் கணக்கிற்கும் வெவ்வேறு கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும்.

இரண்டு காரணி அங்கீகாரத்தை ஆக்டிவேட் செய்யவும்:  இரண்டு காரணி அங்கீகாரம் உங்கள் கணக்கை ஹேக் செய்யாமல் பாதுகாக்கும் கூடுதல் பாதுகாப்பு அடுக்கு, அதாவது Two-Factor Authentication என்னும் அம்சம்  ஆகும். இதில், உங்கள் கடவுச்சொல்லைத் தவிர, உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அனுப்பப்படும் கூடுதல் குறியீட்டையும் உள்ளிட வேண்டும்.

பாதுகாப்பற்ற மூலங்களில் இருந்து செயலிகளை நிறுவக் கூடாது: எப்போதும் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கவும். பாதுப்பு இல்லாத, அறியாத மூலங்கள் அல்லது மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களில் இருந்து செயலிகளை பதிவிறக்குவது உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

பொது வைஃபை நெட்வொர்க்குகளின் மூலம் வங்கி தரவு அல்லது கடவுச்சொற்கள் போன்ற முக்கியமான தகவல்களை எளிதாக அணுக முடியும். எனவே, பொது இடங்களில் கொடுக்கப்படும் வைபையை பயன்படுத்துவதை தவிக்கவும். அப்படி பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் பொது வைஃபையை அணுகும்போது VPN ஐப் பயன்படுத்தவும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link